வழி தவறிய மீன்கள்

வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை

தத்தம் வழியில்
மரணம் நோக்கி
தொடர்கின்றன

ஒரு கைப்பற்றுதலோ
ஒரு முத்தமோ
நிகழ்ந்திருந்தால்
ஒருவேளை
கடல்
அற்றும்
வாழ்ந்திருக்கக்கூடும்

16 :பின்னூட்டங்கள்:

ச.பிரேம்குமார் April 15, 2009 at 11:07 PM  

இலக்குவண், மிக அழகான கவிதை இது.

//இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை//

மனதை மிகவும் கவர்ந்தது இந்த வரிகள் :)

கார்த்திகைப் பாண்டியன் April 15, 2009 at 11:21 PM  

கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..

இராவணன் April 16, 2009 at 2:06 AM  

மிக நன்றி பிரேம் மற்றும் கார்த்திகைப்பாண்டியன்.

MSK / Saravana April 16, 2009 at 11:06 AM  

மிக அருமையா இருக்கு இலக்குவன்.. அட்டகாசமா இருக்கு.

யாத்ரா April 16, 2009 at 11:23 AM  

\\வாழ்ந்திருக்கக்கூடும்\\

வலி நிரம்பியதாயிருக்கிறது.

Unknown April 16, 2009 at 10:07 PM  

பிரேம் அண்ணா தளத்திலிருந்து வந்தேன்.. கவிதை வெகு அழகு.. ஆழமும்.. :)))

இராவணன் April 16, 2009 at 11:24 PM  

மிக நன்றி சரவணா,யாத்ரா மற்றும் ஸிமதிக்கு.

மீண்டும் வரவும்.

தமிழ்நதி April 16, 2009 at 11:34 PM  

நீண்ட நாளைக்குப் பிறகு கவிதை எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. இனி என்னதான் செய்யமுடியும்? கவிதைகளை, கதைகளை எழுதிக்கொண்டிருப்பதைத் தவிர.

சென்ஷி April 17, 2009 at 6:26 AM  

மிக அருமையா இருக்கு இலக்குவன்..

இராவணன் April 17, 2009 at 8:13 AM  

மிக நன்றி சென்ஷி

ச.முத்துவேல் April 21, 2009 at 10:03 AM  

புரிந்தும் புரியாததுபோல் இருந்தது.தமிழ் நதியின் வரிகள் ஒரு கோணத்தைக் கொடுத்தது. ரொம்ப நல்லா வந்திருக்கு.

இராவணன் April 21, 2009 at 9:13 PM  

@ச.முத்துவேல்:

ஒவ்வொரு பருவத்திலும் ஏதோ ஒரு கடலுக்கு நாம் மீனாகிறோம்.

Anonymous April 22, 2009 at 3:15 AM  

:)

சேரலாதன் பாலசுப்பிரமணியன் April 30, 2009 at 8:44 PM  

உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்திய நண்பர் பிரேம்குமாருக்கு என் நன்றிகள் உரித்தாகட்டும். இந்தக் கவிதைக்குச் சொந்தக்காரர் நீங்கள் என்று தெரிந்த பின் என் மனங்கவர்ந்த கவிஞர்களில் ஒருவராகி விட்டீர்கள்.

//வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்

இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை//

நண்பனொருவன் மின்னஞ்சலில் இந்தக் கவிதையை அனுப்பி வைத்தான். படித்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தேன். என்னை மிகவும் பாதித்த கவிதைகளுள் ஒன்று இது. 'ரசிப்போர்' இல் என்னையும் இணைத்துக் கொண்டேன். இது போன்று பல படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.

-ப்ரியமுடன்
சேரல்

இராவணன் May 4, 2009 at 10:04 AM  

மிக நன்றி சேரல்.
இந்த கவிதை என்னை பல வகையில்

ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதைபற்றி விரைவில் பதிவிடுகிறேன்.

Oorsutri August 31, 2009 at 7:53 AM  

கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை

இங்கே கதைகள் கூடாத இல்லாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ...

அருமை இராவணன் ...

உங்கள் கவிதை ஆழ்மனதில் இருந்த மீன்களை எட்டிப்பார்க்க வைக்கிறது ...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP