சற்றே தாமதமாக

1.
சாலைகள் பூக்களாகின
நகரம் தடாகம் ஆனது

காலப்படிகளில்
கண்
இமையைக்
கண்டடைந்தது

இனி எந்த
தூசிக்கு
இங்கு
இடமில்லை


2.
கத்திக்கொண்டிருந்தக்
குழந்தைக்குப்
பால்சோறு

தனிமை
இறந்தகாலம்

தடாகம்
முழுதும் நனைந்திட


நாங்கள்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறோம்

8 :பின்னூட்டங்கள்:

ஆ.சுதா April 28, 2009 at 12:47 AM  

இரண்டாவது கவிதை பிடித்திருந்தது.
தொடர்ந்து எழுதங்கள்.

ரகசிய சிநேகிதி April 28, 2009 at 1:31 AM  

மனதில் நின்ற வரிகள்...

”நாங்கள்
கவிதை
எழுதிக்கொண்டிருக்கிறோம்”

இரு கவிதைகளுமே அருமை

தொடருங்கள்..

யாத்ரா April 28, 2009 at 8:32 AM  

\\கண்
இமையைக்
கண்டடைந்தது

இனி எந்த
தூசிக்கு
இங்கு
இடமில்லை\\

\\தனிமை
இறந்தகாலம்\\

மிகவும் நுட்பமான வரிகள்

மிகவும் பிடித்திருக்கிறது.

இராவணன் April 28, 2009 at 6:44 PM  

மிக நன்றி முத்துராமலிங்கம்,ரகசிய சிநேகதி (பிழைத்திருத்தங்களுக்கும்) மற்றும் யாத்ரா (தொடர் வருகைக்கும். )

சேரலாதன் பாலசுப்பிரமணியன் April 30, 2009 at 8:35 PM  

இரண்டு கவிதைகளும் அருமை!

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை May 4, 2009 at 4:05 AM  

irandaavathu kavithai arumai

இராவணன் May 4, 2009 at 10:03 AM  

மிக நன்றி சேரல் மற்றும் மண்குதிரை.

Unknown May 22, 2009 at 10:52 AM  

//காலப்படிகளில்
கண்
இமையைக்
கண்டடைந்தது //

அருகிலிருந்தும் இவ்வளவு தொலைவிலா?
நல்ல கவிதை நண்பா !

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP