அங்காடித்தெரு - ஒரு எதிர்வினை

திரு வசந்த பாலன் sir,


அங்காடித்தெரு திரைப்படம் பார்த்தேன்.படத்தின் பெயர் அறிந்த காலத்தில் இருந்து அதன் மீதான ஈர்ப்பு இருந்துகொண்டே தான் இருக்கிறது. ('வெயில்' தலைப்பும் அப்படித்தான்).
ஒரு மிக முக்கியமான பிரச்சனையை கையிலெடுத்துள்ளீர்கள்.


படத்தில் என்னை மிகவும் கவர்ந்தது


1)படத்திற்கு தேவையான தகவல்கள் சேகரித்தது.
2)ஒரு பல்பொருள் (மிகப்பெரிய) அங்காடியின் அனைத்து அங்குளங்களையும் பதிவுசெய்தது
3)ரங்கநாதன் தெருவின் வெவ்வேறான வாழ்கையை பதிவு செய்தது.
4)இந்த கதை கருவை பிடிவாதமாக எடுத்த உங்கள் தைரியம் மற்றும் மனோபலம்
5)அஞ்சலியின் நடிப்பு. (விருது வழங்கப்பட வேண்டும்)


படத்தை பார்த்து வந்து ஒரு அயர்வு/தூக்கமின்மை என்னை முழுவதுமாக ஆட்கொண்டது. அதற்கு காரணத்தையே இங்கே தருகிறேன்.


ஒரு சமூகப்பிரச்சனையை திரைப்படமாக அனுகும் போது மிகவும் கவனம் தேவை. காரணம் அது இங்கு இன்று வாழும் மக்களை அவர் தம் வாழ்வை நேரடியாக காட்சிப்படுத்தி அடையாளப்படுத்துகிறது. ஒரு செய்தித்தாள் நிருபரை விட பல மடங்கு பொறுப்புணர்வு ஒரு கலைஞனுக்கு தேவைப்படுகிறது.


ரங்கநாதன் தெருவிலோ குறிப்பிட்ட பல்பொருள் அங்காடியிலோ சுயதொழில் செய்யும் மற்றும் வேலைசெய்யும் மனிதர்கள் அதிகாரமேதுமற்ற ஏதிலிகள். அவர்களுடைய பிரச்சனை குறித்து பேச முற்பட்டிருக்கும் தாங்கள் இந்த படத்தின் சமூக எதிர்வினை(reaction in society after seeing the film) குறித்து யோசித்திருக்கலாம் என்பது என் ஆதங்கம்.


நாளை ஒரு அங்காடிக்குள் நுழையும் மக்கள் அங்கு வேலைபார்க்கும் பெண்கள் மீது வைக்கும் பார்வை எவ்வளவு இரக்கத்தோடும் குரூரமானதாகவும் இருக்கும். என்னை பொறுத்தவரை இப்பொழுது அந்த பெண்கள் அந்தரங்க இடத்தில் உள்ள காயங்களை காட்டுவதற்காக பொதுஇடத்தில் தங்கள் ஆடைகள் அவிழ்கப்பட்டு அவமானப்படுத்தப்பட்டிருப்பதாகவேபடுகிறது.நான் அந்த காட்சிகளை முழுவதுமாக நீக்கச்சொல்லவில்லை.அதே சமயம் முழுக்க முழுக்க அந்த காட்சிகளை சுற்றியே படம் உருவாக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.


திரைமறைவில் பெண்களை பாலியல் வன்கொடுமையை நிகழ்த்திய அன்னாச்சிகளின் அதிகாரத்தை விடவும் வெள்ளித்திரையில் அதை கொண்டுவந்து வியாபாரம் ஆக்கியது மிக அதீதமான அதிகாரம் என்றே கருதுகிறேன். அதிகாரம் படைத்த இருவருக்கு இடையை நிகழும் ஒரு போரின் இடையில், சிக்கித்தவிக்கும் சாதாரண மக்களை போல் அந்த அங்காடியில் வேலை செய்யும் அனைத்து பெண்களின் நிலை உள்ளது.


'அங்காடித்தெரு' ஒரு சுதந்திரத்தை அவர்களுக்கு கையளிக்கவில்லை. அது இயலாது.


குறைந்த பட்சம் அவர்களின் வாழ்கையை அவர்களின் மனிதத்தையும் அவர்களுக்கான நியாயத்தை ஒரு அதிகாரத்திற்கு எதிராக முன்வைக்கவும் இல்லை.ஏனென்றால் படத்தில் அதிகாரத்தில் உள்ளவர்கள் யாரும் மனிதர்களாகவே காட்டப்படவில்லை குற்றவாளிகளாக மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கிறார்கள்.பின் அவர்களிடம் என்ன நியாயம் பேசமுடியும் என்ற இயலாமை பதிவு செய்யப்பட்டிருக்கிறது.


பரிதாபத்திர்குறியதாய் காட்டப்பட்ட அந்த ஏதிலிகளின் வாழ்கை மீது அடுத்த சில தினகளுக்கு ஒரு இரக்கத்தை அங்கு செல்லும் அனைவருக்கும் ஏற்படுத்தும்.அதன் பிறகு எல்லாம் எதார்த்த நிலைக்கு திரும்பும். (அதாவது எதார்த்தம் மாறப்போவதில்லை). நம் வழியில் பார்க்கும் பிச்சைக்கு இடும் ஒரு ரூபாய்க்கும் வழியில் எதிர்கொள்ளும் எளிய மனிதரின் மீது நாம் செலுத்தும் ஒரு புன்னகைக்கும் மிக நீண்ட இடைவெளி உள்ளது.


சமூகப்பொறுப்புணர்வோட திரைப்படம் எடுக்க நினைத்தமைக்கு இப்பொழுதும் தலைவணங்கவே தயாராக இருக்கிறேன்.அடுத்த படத்தில் எளிய மனிதர்களை இன்னும் நெருங்கி பார்க்க முயற்சித்தால் அதில் நிறைய சுவாரசியங்கள் இருக்கும். நம்மால் யூகிக்க முடியாத அளவுக்கு நிறைய எதிர்வினைகள் இருக்கும். வாழ்கையை எதிர்கொள்வதில் எல்லோரும் வெவ்வேறானவர்கள். எல்லோரும் பரிதாபத்தை எதிர்பார்பவர்கள் அல்ல. மூத்திரத்தை வெளியேற்ற அனுமதிக்கபடாத பெண்ணின் பரிதாபம் விடவும் அவளுக்குறிய கோபம் பதிவுசெய்யப்படவேண்டியதாக உருமாறலாம்.


இந்த பதிவு எந்த உள்நோக்கத்தோடும் எழுதப்படவில்லை. எளிய மக்களை நெருங்கி பார்க்கும் ஒரு ஆவணப்புகைப்படக்கலைஞனின் ஆதங்கம் தான் இது.

Read more...

ஆயிரத்தில் ஒருவன் - தற்கால தமிழ் இன அரசியலின் முதல் எதிர்வினை - திரைப்படம்

என்னைப் பொறுத்தவரைக்கும் மிகச் சிறந்த திரைப்படங்கள் இரண்டு வகை .ஒன்று திரை எனும் ஊடகத்தை நன்கு உணர்ந்து உருவாக்கப்படுபவை.மற்றொன்று படம் எடுக்கப்பட்ட மொழி, நாடு மற்றும் மக்களின் வாழ்க்கை முறையைச் சார்ந்த தற்கால கடந்தகால எதிர்கால நிலையின் உண்மையைக் குறித்தான ஒரு விழிப்பை ஏற்படுத்துபவை.(movie of resistance). ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது வகை. அந்த வகையில் தமிழ் சமூகத்தின் மிக முக்கியமான அரசியல் படம் இது என்று கூறலாம்.படத்தில் என்னைப் பாதித்த விஷயங்கள் - மீண்டும் என்னை பார்க்கத்தூண்டும் விஷயங்கள்1. தமிழ் மற்றும் இந்து மரபு சார்ந்த விஷயங்கள்:


தமிழ் திரைப்பட வரலாற்றில் நான் அறிந்தவரையில் தமிழ் மற்றும் இந்து மரபுகளை அட்வன்சர்ஸோட(adventures) இணைத்து விடுவது இதுவே முதல் முறையாகும்.இதனாலேயே இது தமிழ்திரை உலகின் ஒரு மைல் கல் என்றும் கூறலாம்.


1.இப்படத்துடைய ஆரம்பத்தில் வருகிற தெருக்கூத்து , கூத்தின் முதல் வரிசையில் உட்கார்ந்து பார்கிற ஒரு சிறுவனின் மனநிலையையும் அவனின் கற்பனையையும் உண்மைக்கதையாக சொல்ல நினைத்தது மிக அழகான தொடக்கம்.


2. நடராஜன் நிழல் - நாம பார்த்ததெல்லாம் கிருஸ்துவ கோட்பாடுகளும் மற்றும் பிரமிட் பற்றியும் மட்டுமே. நம்ம வாழ்க்கையோடு தொடர்புடைய - நாம இதுவரை கடவுள்னு(!) வழிபடும் தெய்வ உருவங்களை இம்மாதிரியான படங்கள்ல பார்க்கிறது ரொம்பவே பிடிச்சிருக்கு


3.ஓவியம் எல்லாக்காட்சிகளிலும் பயன்படுத்தியிருப்பது. கோயில் ஓவியத்தை காட்டி கதை சொல்லப்பட்டு வளர்ந்த நம் சூழலின் பதிவாக இருக்கிறது2. திரைக்கதைஈழப்பிரச்சனையை பின்புலமாக வெச்சி ஒரு கதை உருவாக்கப்படிருக்கு. அதுவும் மிகவும் மனசுக்கு நெருக்கமாகவும் நெஞ்சை தைக்கும் வகையிலும் அது சொல்லப்பட்டிருக்கு.எந்த ஒரு தமிழனுக்கும்(திராவிடனுக்கும்),ஈழம் ங்கிறது கண் இமைக்குள்ள வெளிவர காத்திருக்கிற ஒரு நீர் துளி மாதிரி. இந்த நாட்கள் நம்ம இன வரலாற்றின் துயரமான பக்கங்களை கடந்துட்டிருக்கோம். படத்துடைய கடைசி ஒரு மணிநேரம் மொத்த திரையரங்கும் மௌனமா இருந்ததுன்னா அது தான் மௌன அஞ்சலி ன்னு அர்த்தமே அன்றி ஒன்னும் புரியாம இல்லை.ஈழப்பிரச்சனை பத்தி படம் எடுக்கிறதோ அதை வெளியிடுறதோ இந்த சூழல்ல அவ்ளோ எளிதில்லை. ஏன்ன கொன்னவனை விட கொலைக்கு ஆயுதம் கொடுத்தவன் ரொம்பவே பயப்படுறான். தன்னுடைய அஹிம்சா முகம் கலைஞ்சிடுமோன்னு.


அதே சமயம் நண்பர் ஆதிஷா - இதெல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததுன்னு சொல்றதையும் என்னால ஏதுக்க முடியல.(ஆதிஷா வின் மொத்தப்பதிவும் பிடிச்சிருந்தது. ஈழம் பற்றிய விமர்சனம் தவிர) http://www.athishaonline.com/2010/01/blog-post_19.htmlபடத்துல இருக்கிற பல நுனுக்கமான விஷயங்களை நாம கவனிக்க தவறுகிறோமோன்னு தான் தோனுது. கீழ சொல்றதை கொஞ்சம் பாருங்க.ஈழத்தமிழர்களும் சோழப்பரம்பரை.புலிக்கொடிமன்னனின் வார்த்தைக்காகவும் மானம் இழக்கும் பொழுதும் எதிரியிடம் சிக்கும் பொழுதும் தன்னைதானே கழுத்தை அறுத்து சாகும் மக்கள்படத்துடைய பேர் :ஆயிரத்தில் ஒருவன்.இந்த பெயர் நேரடியாக படத்தில பார்த்தீர்களானால் படத்துல நடிச்ச யாரையும் குறிப்பதாகவே தோன்றாது ( கார்த்தி பெரும்பாலும் அடிவாங்குவே அதிகம்).அப்புறம் அந்த பழையப்பாடல். அடிமையா இருந்து மீளும் ஒரு இனத்தின் மிக முக்கியமான பாடல்."ஒரே வானிலே ஒரே மன்னிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம். "இதை வெறும் ரீ-மிக்ஸ் சொல்லிட்டு ஒதுக்கிடமுடியாது. அதுமட்டுமில்லாம M.G.R நேரடியா ஈழமக்களின் எல்லா செயல்பாடுகளுக்கும் ரொம்ப உறுதுனையாக இருந்தவர்ங்கிறதும் இங்கே மிக முக்கியம். கார்த்தி M.G.R ரசிகனா காட்டப்பட்டிருப்பது இதுதான் காரணமா இருக்கும். அவன் பின்பாதி கதையில அந்த மக்களோட சேர்ந்து உதவுவது போல படம் நிறைவடைவது இதையே குறிப்பதாக படுகிறது.படத்தின் முதல் பாதி நிகழ் காலத்தையும் குகைக்குள்ள சோழர்காலத்தையும் பின் குகைக்குள்ளிருந்து வெளியாகுவதில் ஈழக்காலகட்டத்தையும் பதிவுசெய்திருக்கிறது. இதுவே ஒரு புதுமையான முயற்சி தான். இரண்டு காலமும் ரொம்பத்தெளிவாக படத்தில் பின்னப்படிருக்கு ஒரு கடல் கரையில தலைவன் இறப்பது உட்பட.(படம் முழுக்க முழக்க போர் நடந்த காலத்திலேயா படமாகவும்உருவாக்கப்பட்டிருப்பது இனம்பிரித்து அறிய முடியாத உணர்வை தருகிறது. எனக்கு கிடைத்த தகவல் படி படத்தின் இறுதிகாட்சிக்கள் மறு-படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக தெரிகிறது (MAY 19 பிறகு).)அதுமட்டும் இல்லைங்க அழகம்பெருமாள் - ஷரத்பொன்சேகாவை மிகச்சாதரணமாக நினைவுபடுத்துவதை அவ்ளோ எளிதாக military haircut ல இருக்கிற ஒற்றுமைன்னு மட்டும் சொல்லி ஒதுக்க முடியாது. பாதுகாப்பு அரண்கள் : அமானுஷயங்களா தெரிஞ்சாலும் இதுவும் ஈழ நாட்டின் பாதுகாப்பு அரண்களை நினைவுபடுத்துது.3.தமிழ் இன கறை நீக்கும் முயற்சி - பார்த்திபன் - ஆன்டிரியா - ரீமா சென்இதுவும் ஒரு ஆழமான அரசியல் நிரம்பிய காட்சி. மிக நீண்ட காலமாக தமிழன் ஒரு காம வெறியன் (இராவணன்) என்ற ஒரு பொது புத்தி பரப்பிவிடப்பட்டிருக்குது.ரீமா விருப்பத்தோடு வந்தாலும் அவள் யார் என்று அறியத்தலைப்பட்டு விலகுவதும் பின் அவளைப் புணர்வதும் ஆந்திரியா புணர விழைந்தே வந்திருக்கிறாள் என்று நினைத்து தன் ஆடைக்களைவதும் அவள் விருப்பமில்லை என்று அறிந்ததும் அவளை அங்கிருந்து போகச்சொல்வதும், பெண்ணிற்கான விருப்பம் பிராதானப்படுத்தி அரசன் தனக்கே உரித்தான சுய கவுரம் உள்ளவனாக சித்தரித்திருப்பது. பின்பு அந்த இனம் அடிமையாகும் பொழுது (இந்திய) ராணுவ வீரர்கள் பெண்களை ஈவிரக்கமின்றி கற்பழிப்பது.4. கருப்பு - வெள்ளை அரசியல்பெரும்பாலான தமிழ் படங்கள்ல hero க்கள் வெள்ளையாக இருப்பார்கள் மற்றும் மீசை இல்லாமல் இருப்பார்கள்.வில்லன் - கண்டிப்பா கருப்பாகத்தான் இருப்பான் . மீசை பெருசாக இருக்கும். தலைமுடி நிறைய வைத்திருப்பான்.
Heroine:பொண்ணு வெள்ளையா இருப்பாள்.அதனால நல்லவள் (உயர்ந்த பண்புகள் உடையவளாகவும்) கருதப்படுகிறாள். கருப்பாக இருப்பவள் மிகக்கேவலம்(அங்கவை - சங்கவை - ஷங்கரின் அசிங்கமான மனம்) .கருப்பினத்தின் (திராவிட – தமிழ்) அழகி கருப்பியாகவே இருக்கவேண்டுமே தவிர வெள்ளையாக இருந்தால் அங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டியது, வெள்ளைக்கு அடிமையாக கருப்பு இருக்கிறது என்பதே.( உண்மையில் இது மிகச்சாதராண விஷயமல்ல. இது பற்றி தனியே நிறைய எழுத வேண்டும்) தமிழ்நாட்டு பெண்கள் சுத்தமாக நிராகரிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். (மன்னிக்கவேண்டும் த்ரிஷா வை தமிழச்சி என்று சொன்னால் விரக்தியாக சிரிப்பதை தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.).நம்மக்கள் எந்த வித யோசனையும் இன்றி வில்லனையும் heroவையும் டையாளப்படுத்திக்கொள்வார்கள். அதாவது சொந்த இனத்தை சார்ந்தவன் (அல்லது சொந்த இனத்தின் அடையாளங்கள் கொண்டவன்) வில்லனாகவும் மாற்று இனம் சேர்ந்தவன் - அன்று தெய்வம் இன்று நல்லவன்(hero).தமிழ்சினிமாவில் முதல் முறையாக ஒரு மக்கள் கூட்டம் மொத்தமும் கருப்பாக இருக்கிறது (வேண்டுமென்றே கரி பூசி நடித்திருப்பதும் என்னை பொறுத்தவரை ஒரு அரசியல் கூறே ). அந்த கூட்டம் நல்ல தமிழ் பேசுவதும் அந்த இனம் தன் சொந்த மண் அபகரிக்கப்பட்டு வாழ்வதும் பின் வெள்ளைதோளுடைய ஒருத்தி வந்து வில்லியாக உருமாறுவதும் அவள் விஷம் கலந்து தமிழின த்தவரை கொலை செய்வதும் பின் சிறு ஆயுதங்களால் அழிக்க முடியாத இனத்தை கனரக ஆயுதங்களை/ ஆயுதப்படை (இந்தியாவிலிருந்து வரவழைத்து) குண்டுகள் வீசி அவர்களை அழித்துவிடுவதும் நம் கண்முன் நிகழ்கால கருப்பு தினங்கள் காட்சிகளாக விரிகிறது.7இன்னும் இன்னும் என்னை இந்த படம் பாதிச்சதுக்கு மிக முக்கியமான காரணம் ரீமாசென் கதாபாத்திரம் - நல்ல வெள்ளையாக இருக்கும் ஒருத்தியை - பாண்டிய நாட்டுபெண் என்று


அடையாளப்படுத்துவது. அது கண்டிப்பாக பாண்டியா நாட்டுப்பெண்ணை குறிக்கவில்லை என்பதை வேறெப்படியும் செல்வாவால் பதிவு செய்திருக்க முடியாது.


‘நாங்கள் மத்திய அமைச்சர்களாகவும் இருக்கிறோம்’ என்று ரீமா சொல்வதும் மிக மிக நேரடியான அரசியல் எதிர்வினை.பொதுவாக வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான என் விளக்கம்:1.LOGIC இல்ல: .வேறுதேசத்தின் திடீரென்று cell பேசுவது.


நீங்க ஆங்கில படங்களில் வரும் சருக்கள்கள் பற்றி ஒரு கேள்வியும் எழுப்புவதில்லை.Bourne ultimatum - நான் பார்த்தலே சுத்தமா பிடிக்காத படங்கள்ல இதுவும் ஒன்னு. அதுல ஒரு


காட்சி வரும் அதாவது அந்த hero யாருக்கும் எதுக்கும் பயப்படமாட்டான்.என்னென்னவோ பண்ணுவான்.ஆனா நாம அதை கேள்வி எழுப்ப மாட்டோம்.ஏன்னா அதுக்கு அவனே சொல்லிடுவான் அவன் பெரிய திறமைசாலின்னு. புரியலையா. ஒரு காட்சியில HERO ஓடுவான். திடீர்னு ஒரு hotel வழிய ஓடும் பொழுது அங்க ஒரு cloth (dining table) எடுத்துட்டு ஓடுவான். ஏன்னு நமக்கு யோசனையா இருக்கும். அப்ப ஒரு கண்ணாடி சில்லுகள் பதிக்கப்பட்ட ஒரு சுவர் வரும்.அவன் கையில இருக்கிற துனியை வெச்சி தாண்டுவான்.


உடனே என் பக்கத்துல உட்கார்ந்து படம் பார்த்துடிருந்த நண்பன் பயங்கரமா கைதட்டினான். தியேட்டரே கைதட்டுச்சி.அதாவது செம LOGIC.இதே காட்சிய தமிழ்படத்துல வெச்சிருந்தா துணியெல்லாம் இல்லாம வெறும் கையிலயே தாண்டிடுவான். இது தாங்க இவுங்க சொல்ற LOGIC சருக்கல்.இதுல ஒரு துளிகூட மனித எதார்த்தம் இல்லை. வெறும் ஒரு பொருள். கலை யில்லை. அடுத்த காட்சியல கண்ணாடி மேல கை வைக்கனும்னு முன்னாடி காட்சியில துணியை எடுத்துட்டு ஓடுறது ஒரு கட்டமைப்பு. இது கலை ஆகா.


இன்னும் புரியலைன்னா.ஆயிரத்தில் ஒருவன் ஒரு english படமா இருந்தா... எங்கிட்ட ஒரு cell phone இருக்கு. ரொம்ப புதிய ரகம். இதுல என்ன விஷயம்னா இது எந்த நாட்டுக்கு போனாலும் எந்த இடத்துக்குப்போனாலும் இது வேலைசெய்யும்னு hero வுடைய நண்பன் சொல்வன் (முதல் பாதியில). hero அதை வாங்கிட்டு வந்திருப்பார். இரண்டாவது பாதியில பயன் படுத்துவார். அப்ப உங்களுக்கெல்லாம் எந்த logic ம் இடிச்சிருக்காது. அட போங்கப்பா.2. படத்தில் செம்மொழி என்ற பெயரில் சமஸ்கிரத்ததை தவிர்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த தமிழ் புரியவேயில்லை


சோழர் காலத்து தமிழ் தான் இந்த படத்துல பயன்பட்டிருக்கு. முதல்முறையா தமிழ்அறிஞர்களுடைய உதவியோடு அந்த மொழி முழுமைப்பெற்றிருக்கு. அதை கேட்டகும் போது எனக்கு இருந்த ஆனந்ததிற்கு அளவே இல்ல. அது மட்டுமில்லாம இந்த மொழி உருவாக்கத்துக்கு பின்னால இருக்கிற உழைப்பை மிகச்சாதரணமா நிராகரிக்க வார்த்தைகள் ,’ செந்தமிழ் வேணும்னு அகாரதியை தேடி எடுத்திருக்காய்ங்க போல’ ன்னு சொல்வது.http://vandhiyadevan.blogspot.com/ அந்த காலத்துல சமஸ்கிரதம் குறைவா பரவியிருக்கு. இன்னைக்கு தமிழ்ல தமிழை தான் தேடவேண்டியதா இருக்கு. முழுக்க முழுக்க சமஸ்கிரதமும் ஆங்கிலமும் தான். அதுக்கு வருத்தப்பட எந்த தமிழனும் இப்ப இல்லை. தன் பிள்ளைகளுக்கு பேர்வைக்கும் பொழுது தவறாம ஷ,ஹ,ஜ,ஸ இருக்கனும் பார்த்து பார்த்து பேர்வைக்கிறான் ஒவ்வொரு தமிழனும். (கருப்பன், முனியாண்டி, மாயான்டி, சங்கிலி முருகன், குனசாகரன் தமிழவன் நிலவன் etc..) இதெல்லாம் ஊரில் உள்ள படிப்பறிவில்லாத நம் மூதாதையர்களின் பெயர்கள்(!). உலகத்தலயே தன்மொழியில பேர் வெச்சிக்காத வெச்சிக்க விரும்பாத மற்றும் வெச்சிக்க அனுமதிக்கப்படாத ஒரே இனம் தமிழ் (திராவிட) இனம் தான்.படத்தில் சுத்தமாக பிடிக்காதது1.Graphics - பணம் போதியிருக்காது. 1000 கோடி ரூபாய் படங்களை பார்க்க தொடங்கிவிட்ட நம் கண்களுக்கு உள்ளூர் 36 கோடி ரூபாய் கடினம் தான்.


இது தான் நமக்கு சாத்தியம். இருந்தாலும் 36 கோடியில் இன்னும் திறமையோடு எடுத்திருக்கலாம் என்று திரை உலகு நண்பர்கள் கூறினார்கள்.


செல்வாவுக்கு graphics சம்பந்தமான அறிவு போதவில்லை என்பதே அடிப்படை காரணம் என்று தெரிகிறது. graphic பெரும்பாலும் தவிர்த்திருக்கலாம்.2.நிறைய ஆங்கிலப்படங்களின் காட்சிகளை தழுவியது (அ) திருடியது3.Editing : படம் பலமுறை முடிந்து முடிந்து தொடங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது கருப்புதிரை வந்து போகும் பொழுதெல்லாம்.முக்கியமாக பாராட்டப்படவேண்டியவர்கள்1. திரைக்கதை 0 செல்வா


2. தயாரிப்பாளர் (இந்த படத்தை எடுக்க பணமும் தேவை தைரியமும் தேவை)


3.துணை நடிகர்கள்


4.ART குழு


5.வைரமுத்து - பாடல்- வில்லாடிய


6.கார்த்தி (பெருசா image பார்க்காம அடிவாங்குறதும் etc..etc..)


7.ரீமா
Techincal குறைபாட்டை வைத்து ஒரு படத்தை அரைவேக்காடு என்று சொல்வது திரைப்படம் என்ற கலையை பற்றி அடிப்படையான தெளிவுகூட இல்லாமல் இருக்கிறோம் என்றே அர்த்தம். இது Indian Express and ஆனந்த விகடன் மக்களுக்கும் பொருந்தும்.நன்றி


இராவணன்


Read more...

யன்னல்கள்

அம்புலி படர்ந்த சமையல் பாத்திரங்கள்
மின்விசிறி இணைப்பை இரைச்சல்களை நிறுத்தி மென்தென்றல் உலவும் அமைதியை உடுத்தும் இரவு
பனித்த விடியலில் பல்துலக்கியபடி வானம்
ஆடைகள் களைந்து குளிக்கும் அறையில் பழுத்த இலைகளும் வீதியின் மழையும்

திசையெங்கும் யன்னல்கள் வழி
வெளி நிறையும் வீடு

வாழத்தகுந்த இடமாய் நகரம்

Read more...

அது

அது அப்படித்தான்
இருந்தது

சிந்தாமல்
சிதறாமல்
ஒரு கண்ணாடிக்குடுவையில்
நீர் ஊற்றுவது போல


இப்பொழுதும் கூட
மீண்டும் ஒரு முறை
நிரம்பித்
தளும்பியது


குறிப்பு : (இது ‘
உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பு’ நடத்தும் கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது).

Read more...

வெற்றுத்திண்ணை

தூசிகள் படர்ந்த
வெற்றுத்திண்ணை
சற்றே வேகமாக
கடந்திருக்குமோ வாகனங்கள்

Read more...

சில நிமிடங்கள் கொடுங்கள்

தயவுசெய்து
சில நிமிடங்கள் கொடுங்கள்
ஆடைகளை களைகிறேன்
விலங்காகிறேன்
பின் கண்டிப்பாக வாலாட்டுகிறேன்

Read more...

முதல் நாள் முதல்

எனக்கு இந்த dress வேணாம்.எனக்கு அந்த பூப்போட்டது தான் வேணும்

நீ இப்போ schoolக்கு போகப்போற.இது uniform dress.இதை போட்டாதான் schoolக்கு போகமுடியும்.

எதுக்கு school போகனும்?

படிக்கனும் னா school போகனும்டா கண்ணு.

அப்ப நான் படிக்கல.

முதல் நாளே இப்படி சொல்லாத கண்ணு.படிச்சாதான் வேலைக்கு போகமுடியும்.வேலைக்கு போனாதான் பணம் சம்பாதிக்கமுடியும்.

எனக்கு இப்ப அந்த dress தான் வேணும்.பணம் எல்லாம் வேணாம்.

பணம் இருந்தாதான் கண்ணு நல்லா வாழமுடியும்.


எவ்வளவு பொய்கள்....

Read more...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP