இது கவிதையல்ல

தனிமையை உணர்ந்து
பக்கமிருந்து
சிறு அசைவுகளோடு
மனதின் இரணங்களை மருந்திட்டு
தோள் சாய்ந்து
தன் இருப்பினால் என் வாழ்வை அர்த்தப்படுத்தி
ஈரமணல் அமர்ந்து
கடல் பார்த்து மௌனித்து
வார்த்தைகள் தொலையும் இடங்களில்
கைகளைப்பற்றி
எல்லாம் பகிர்ந்துவிட்டதாய்
சிறுபுன்னகையோடு
கடல்காற்று முகம் அறைய
விழிநீர் மறைத்து
அந்த நிமிடங்கள் வாழ்க்கை வாழப்படுவதாய்
உறக்க சப்தமிடும் மனதோடு
இசைந்துருகி உயிர்பிரியும்
இந்த நொடிகளில்

தனித்து கிடக்கிறது
வாழ்க்கையும் மரணமும்

நான் வாங்கும் சம்பளத்தை குறித்து யோசித்துக்கொண்டிருக்கிறேன்.
நீ உன் செவ்வாய் கிழமை பற்றிய வழமையோடு

4 :பின்னூட்டங்கள்:

MSK / Saravana July 23, 2008 at 5:07 AM  

புரியல நண்பரே.. அதென்ன செவ்வாய் கிழமை ??

இராவணன் July 23, 2008 at 11:16 AM  

:)

நேற்று செவ்வாய்கிழமை.
நீ உன் செவ்வாய்கிழமைக்கான அலுவலில் இருப்பாய்.

Anonymous July 29, 2008 at 1:58 AM  

ஹையோ ஹையோ

ஒன்னியும் பிரில

இராவணன் August 20, 2008 at 7:39 PM  

;)
நன்றி ஜக்கு.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP