கூடு

நடுங்கும் குளிரில்
உடைந்த முட்டையோடுகளின் மிச்சமும்
குருதி நாற்றமும்
சகிக்காது
தனித்த கூட்டின் எல்லை கடந்து
சற்றுமுன் பிறந்த சிறு பறவை எழுப்பும் சப்தம்
இந்த உலகத்தின் எல்லா இரைச்சல் கடந்து
என்னை மட்டும் நெருங்குகிறது
இல்லை இல்லை
என்னிலிருந்து தான் தொடங்குகிறது

2 :பின்னூட்டங்கள்:

MSK / Saravana July 23, 2008 at 5:05 AM  

//இல்லை இல்லை
என்னிலிருந்து தான் தொடங்குகிறது//

நன்று.

sukan August 4, 2008 at 6:50 PM  

இறுதியில் மிக அற்புதமாக உணர்வை அர்த்தப்படுத்தியுள்ளீர்கள்.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP