மௌனங்கள்

மௌனங்களால்
அறுந்து கிடக்கும்
உயிரில்
கசியும் குருதியை
ஈக்கள் மொய்க்கின்றன
இரவு நேரங்களில்
நாய்களும்

இந்தப்பொழுதின்
மென் காற்றில்
வண்ணங்கள் தூவி
மிதந்துகொண்டிருக்கிறது
ஒரு நீர்க்குமிழி
எந்த நொடியும்
உடையக்கூடிய சாத்தியங்களோடு

3 :பின்னூட்டங்கள்:

Dreamzz February 25, 2008 at 5:29 AM  

mm
aazhamaana kavidhai
nalla irundhadhu..

இராவணன் February 25, 2008 at 8:33 AM  

மிக நன்றி dreamzz..தொடர் வருகைக்கும்

CVR February 25, 2008 at 9:03 AM  

ஏதோ மேஜர் மேட்டரு சொல்லுறீங்கன்னு தெரியுது!!
ஆனா என்ன சொல்ல வரீங்கன்னு புரியல!! :-(

மொத பத்தி ஏதோ புரியறா மாதிரி இருந்துச்சு,ஆனா ரெண்டாவதுக்கும் முதல் பத்திக்கும் என்ன சம்பந்தம்னு தெரியல!

மௌனங்களால் மனித உறவுகளும் அதனால் உயிர்களும் காயப்பட்டு போகின்றன என்று சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்!!
வண்ணமயமான நீர்ககுமிழி போல அழகாக தெரியும் நம் வாழ்க்கையும் எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து காயப்படலாம் என்று இரண்டாவது பத்தி கூறுகிறது என்று நினைக்கிறேன்.
எனது புரிதல் சரிதானா?? ;)

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP