ஒரு புன்னகை

உடன் பகிர்ந்து விட
இயலாத ஒரு புன்னகை
சிதறி கிடக்கிறது
பூக்களாய்
பிணம் சென்ற
வழியெல்லாம்

வெறும்
அடையாளமாகவும்
தனித்தும்
நிராகரிப்பின் வலியோடும்

எந்த பிரக்ஞையுமற்று
மெல்ல
மேற்கு நோக்கி
நகர்கிறது சூரியன்

5 :பின்னூட்டங்கள்:

Dreamzz February 23, 2008 at 7:33 AM  

nalla varthai amaipu
kavidhai was nice

meenamuthu February 23, 2008 at 10:51 AM  

விரக்தி ஒவ்வொரு வரிகளிலும்!

'கண்டும் காணாமல்... ஆனாலும் இந்த சூரியன் ரொம்ப மோசம்

cheena (சீனா) February 23, 2008 at 9:36 PM  

உடல் சென்ற வழியெல்லாம் சிதறிக்கிடக்கும் பூக்கள் - எதையும் கண்டு கொள்ளாமல் கடமையே கண்ணாகப் பகலவன் - பூக்களும் கடமையைத்தான் செய்கின்றன என உணர்த்துகிறானோ

Anonymous May 12, 2008 at 11:04 PM  

very good lines :-) Keep posting more :-)

MSK / Saravana May 22, 2008 at 1:46 AM  

"உடன் பகிர்ந்து விட
இயலாத ஒரு புன்னகை
சிதறி கிடக்கிறது
பூக்களாய்
பிணம் சென்ற
வழியெல்லாம்

வெறும்
அடையாளமாகவும்
தனித்தும்
நிராகரிப்பின் வலியோடும்

எந்த பிரக்ஞையுமற்று
மெல்ல
மேற்கு நோக்கி
நகர்கிறது சூரியன்"


மிக மிக அருமை நண்பரே..

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP