ஆயிரத்தில் ஒருவன் - தற்கால தமிழ் இன அரசியலின் முதல் எதிர்வினை - திரைப்படம்

என்னைப் பொறுத்தவரைக்கும் மிகச் சிறந்த திரைப்படங்கள் இரண்டு வகை .ஒன்று திரை எனும் ஊடகத்தை நன்கு உணர்ந்து உருவாக்கப்படுபவை.மற்றொன்று படம் எடுக்கப்பட்ட மொழி, நாடு மற்றும் மக்களின் வாழ்க்கை முறையைச் சார்ந்த தற்கால கடந்தகால எதிர்கால நிலையின் உண்மையைக் குறித்தான ஒரு விழிப்பை ஏற்படுத்துபவை.(movie of resistance). ஆயிரத்தில் ஒருவன் இரண்டாவது வகை. அந்த வகையில் தமிழ் சமூகத்தின் மிக முக்கியமான அரசியல் படம் இது என்று கூறலாம்.



படத்தில் என்னைப் பாதித்த விஷயங்கள் - மீண்டும் என்னை பார்க்கத்தூண்டும் விஷயங்கள்



1. தமிழ் மற்றும் இந்து மரபு சார்ந்த விஷயங்கள்:


தமிழ் திரைப்பட வரலாற்றில் நான் அறிந்தவரையில் தமிழ் மற்றும் இந்து மரபுகளை அட்வன்சர்ஸோட(adventures) இணைத்து விடுவது இதுவே முதல் முறையாகும்.இதனாலேயே இது தமிழ்திரை உலகின் ஒரு மைல் கல் என்றும் கூறலாம்.


1.இப்படத்துடைய ஆரம்பத்தில் வருகிற தெருக்கூத்து , கூத்தின் முதல் வரிசையில் உட்கார்ந்து பார்கிற ஒரு சிறுவனின் மனநிலையையும் அவனின் கற்பனையையும் உண்மைக்கதையாக சொல்ல நினைத்தது மிக அழகான தொடக்கம்.


2. நடராஜன் நிழல் - நாம பார்த்ததெல்லாம் கிருஸ்துவ கோட்பாடுகளும் மற்றும் பிரமிட் பற்றியும் மட்டுமே. நம்ம வாழ்க்கையோடு தொடர்புடைய - நாம இதுவரை கடவுள்னு(!) வழிபடும் தெய்வ உருவங்களை இம்மாதிரியான படங்கள்ல பார்க்கிறது ரொம்பவே பிடிச்சிருக்கு


3.ஓவியம் எல்லாக்காட்சிகளிலும் பயன்படுத்தியிருப்பது. கோயில் ஓவியத்தை காட்டி கதை சொல்லப்பட்டு வளர்ந்த நம் சூழலின் பதிவாக இருக்கிறது



2. திரைக்கதை



ஈழப்பிரச்சனையை பின்புலமாக வெச்சி ஒரு கதை உருவாக்கப்படிருக்கு. அதுவும் மிகவும் மனசுக்கு நெருக்கமாகவும் நெஞ்சை தைக்கும் வகையிலும் அது சொல்லப்பட்டிருக்கு.எந்த ஒரு தமிழனுக்கும்(திராவிடனுக்கும்),ஈழம் ங்கிறது கண் இமைக்குள்ள வெளிவர காத்திருக்கிற ஒரு நீர் துளி மாதிரி. இந்த நாட்கள் நம்ம இன வரலாற்றின் துயரமான பக்கங்களை கடந்துட்டிருக்கோம். படத்துடைய கடைசி ஒரு மணிநேரம் மொத்த திரையரங்கும் மௌனமா இருந்ததுன்னா அது தான் மௌன அஞ்சலி ன்னு அர்த்தமே அன்றி ஒன்னும் புரியாம இல்லை.



ஈழப்பிரச்சனை பத்தி படம் எடுக்கிறதோ அதை வெளியிடுறதோ இந்த சூழல்ல அவ்ளோ எளிதில்லை. ஏன்ன கொன்னவனை விட கொலைக்கு ஆயுதம் கொடுத்தவன் ரொம்பவே பயப்படுறான். தன்னுடைய அஹிம்சா முகம் கலைஞ்சிடுமோன்னு.


அதே சமயம் நண்பர் ஆதிஷா - இதெல்லாம் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்ததுன்னு சொல்றதையும் என்னால ஏதுக்க முடியல.(ஆதிஷா வின் மொத்தப்பதிவும் பிடிச்சிருந்தது. ஈழம் பற்றிய விமர்சனம் தவிர) http://www.athishaonline.com/2010/01/blog-post_19.html



படத்துல இருக்கிற பல நுனுக்கமான விஷயங்களை நாம கவனிக்க தவறுகிறோமோன்னு தான் தோனுது. கீழ சொல்றதை கொஞ்சம் பாருங்க.



ஈழத்தமிழர்களும் சோழப்பரம்பரை.



புலிக்கொடி



மன்னனின் வார்த்தைக்காகவும் மானம் இழக்கும் பொழுதும் எதிரியிடம் சிக்கும் பொழுதும் தன்னைதானே கழுத்தை அறுத்து சாகும் மக்கள்



படத்துடைய பேர் :ஆயிரத்தில் ஒருவன்.இந்த பெயர் நேரடியாக படத்தில பார்த்தீர்களானால் படத்துல நடிச்ச யாரையும் குறிப்பதாகவே தோன்றாது ( கார்த்தி பெரும்பாலும் அடிவாங்குவே அதிகம்).



அப்புறம் அந்த பழையப்பாடல். அடிமையா இருந்து மீளும் ஒரு இனத்தின் மிக முக்கியமான பாடல்."ஒரே வானிலே ஒரே மன்னிலே ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம். "இதை வெறும் ரீ-மிக்ஸ் சொல்லிட்டு ஒதுக்கிடமுடியாது. அதுமட்டுமில்லாம M.G.R நேரடியா ஈழமக்களின் எல்லா செயல்பாடுகளுக்கும் ரொம்ப உறுதுனையாக இருந்தவர்ங்கிறதும் இங்கே மிக முக்கியம். கார்த்தி M.G.R ரசிகனா காட்டப்பட்டிருப்பது இதுதான் காரணமா இருக்கும். அவன் பின்பாதி கதையில அந்த மக்களோட சேர்ந்து உதவுவது போல படம் நிறைவடைவது இதையே குறிப்பதாக படுகிறது.



படத்தின் முதல் பாதி நிகழ் காலத்தையும் குகைக்குள்ள சோழர்காலத்தையும் பின் குகைக்குள்ளிருந்து வெளியாகுவதில் ஈழக்காலகட்டத்தையும் பதிவுசெய்திருக்கிறது. இதுவே ஒரு புதுமையான முயற்சி தான். இரண்டு காலமும் ரொம்பத்தெளிவாக படத்தில் பின்னப்படிருக்கு ஒரு கடல் கரையில தலைவன் இறப்பது உட்பட.(படம் முழுக்க முழக்க போர் நடந்த காலத்திலேயா படமாகவும்உருவாக்கப்பட்டிருப்பது இனம்பிரித்து அறிய முடியாத உணர்வை தருகிறது. எனக்கு கிடைத்த தகவல் படி படத்தின் இறுதிகாட்சிக்கள் மறு-படப்பிடிப்பு நடத்தப்பட்டதாக தெரிகிறது (MAY 19 பிறகு).)



அதுமட்டும் இல்லைங்க அழகம்பெருமாள் - ஷரத்பொன்சேகாவை மிகச்சாதரணமாக நினைவுபடுத்துவதை அவ்ளோ எளிதாக military haircut ல இருக்கிற ஒற்றுமைன்னு மட்டும் சொல்லி ஒதுக்க முடியாது. பாதுகாப்பு அரண்கள் : அமானுஷயங்களா தெரிஞ்சாலும் இதுவும் ஈழ நாட்டின் பாதுகாப்பு அரண்களை நினைவுபடுத்துது.



3.தமிழ் இன கறை நீக்கும் முயற்சி - பார்த்திபன் - ஆன்டிரியா - ரீமா சென்



இதுவும் ஒரு ஆழமான அரசியல் நிரம்பிய காட்சி. மிக நீண்ட காலமாக தமிழன் ஒரு காம வெறியன் (இராவணன்) என்ற ஒரு பொது புத்தி பரப்பிவிடப்பட்டிருக்குது.ரீமா விருப்பத்தோடு வந்தாலும் அவள் யார் என்று அறியத்தலைப்பட்டு விலகுவதும் பின் அவளைப் புணர்வதும் ஆந்திரியா புணர விழைந்தே வந்திருக்கிறாள் என்று நினைத்து தன் ஆடைக்களைவதும் அவள் விருப்பமில்லை என்று அறிந்ததும் அவளை அங்கிருந்து போகச்சொல்வதும், பெண்ணிற்கான விருப்பம் பிராதானப்படுத்தி அரசன் தனக்கே உரித்தான சுய கவுரம் உள்ளவனாக சித்தரித்திருப்பது. பின்பு அந்த இனம் அடிமையாகும் பொழுது (இந்திய) ராணுவ வீரர்கள் பெண்களை ஈவிரக்கமின்றி கற்பழிப்பது.



4. கருப்பு - வெள்ளை அரசியல்



பெரும்பாலான தமிழ் படங்கள்ல hero க்கள் வெள்ளையாக இருப்பார்கள் மற்றும் மீசை இல்லாமல் இருப்பார்கள்.வில்லன் - கண்டிப்பா கருப்பாகத்தான் இருப்பான் . மீசை பெருசாக இருக்கும். தலைமுடி நிறைய வைத்திருப்பான்.




Heroine:பொண்ணு வெள்ளையா இருப்பாள்.அதனால நல்லவள் (உயர்ந்த பண்புகள் உடையவளாகவும்) கருதப்படுகிறாள். கருப்பாக இருப்பவள் மிகக்கேவலம்(அங்கவை - சங்கவை - ஷங்கரின் அசிங்கமான மனம்) .கருப்பினத்தின் (திராவிட – தமிழ்) அழகி கருப்பியாகவே இருக்கவேண்டுமே தவிர வெள்ளையாக இருந்தால் அங்கு நாம் அறிந்து கொள்ள வேண்டியது, வெள்ளைக்கு அடிமையாக கருப்பு இருக்கிறது என்பதே.( உண்மையில் இது மிகச்சாதராண விஷயமல்ல. இது பற்றி தனியே நிறைய எழுத வேண்டும்) தமிழ்நாட்டு பெண்கள் சுத்தமாக நிராகரிக்கப்பட்டவர்களாகவே இருக்கிறார்கள். (மன்னிக்கவேண்டும் த்ரிஷா வை தமிழச்சி என்று சொன்னால் விரக்தியாக சிரிப்பதை தவிர வேறொன்றும் செய்வதற்கில்லை.).



நம்மக்கள் எந்த வித யோசனையும் இன்றி வில்லனையும் heroவையும் டையாளப்படுத்திக்கொள்வார்கள். அதாவது சொந்த இனத்தை சார்ந்தவன் (அல்லது சொந்த இனத்தின் அடையாளங்கள் கொண்டவன்) வில்லனாகவும் மாற்று இனம் சேர்ந்தவன் - அன்று தெய்வம் இன்று நல்லவன்(hero).



தமிழ்சினிமாவில் முதல் முறையாக ஒரு மக்கள் கூட்டம் மொத்தமும் கருப்பாக இருக்கிறது (வேண்டுமென்றே கரி பூசி நடித்திருப்பதும் என்னை பொறுத்தவரை ஒரு அரசியல் கூறே ). அந்த கூட்டம் நல்ல தமிழ் பேசுவதும் அந்த இனம் தன் சொந்த மண் அபகரிக்கப்பட்டு வாழ்வதும் பின் வெள்ளைதோளுடைய ஒருத்தி வந்து வில்லியாக உருமாறுவதும் அவள் விஷம் கலந்து தமிழின த்தவரை கொலை செய்வதும் பின் சிறு ஆயுதங்களால் அழிக்க முடியாத இனத்தை கனரக ஆயுதங்களை/ ஆயுதப்படை (இந்தியாவிலிருந்து வரவழைத்து) குண்டுகள் வீசி அவர்களை அழித்துவிடுவதும் நம் கண்முன் நிகழ்கால கருப்பு தினங்கள் காட்சிகளாக விரிகிறது.7



இன்னும் இன்னும் என்னை இந்த படம் பாதிச்சதுக்கு மிக முக்கியமான காரணம் ரீமாசென் கதாபாத்திரம் - நல்ல வெள்ளையாக இருக்கும் ஒருத்தியை - பாண்டிய நாட்டுபெண் என்று


அடையாளப்படுத்துவது. அது கண்டிப்பாக பாண்டியா நாட்டுப்பெண்ணை குறிக்கவில்லை என்பதை வேறெப்படியும் செல்வாவால் பதிவு செய்திருக்க முடியாது.


‘நாங்கள் மத்திய அமைச்சர்களாகவும் இருக்கிறோம்’ என்று ரீமா சொல்வதும் மிக மிக நேரடியான அரசியல் எதிர்வினை.



பொதுவாக வைக்கபட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கான என் விளக்கம்:



1.LOGIC இல்ல: .வேறுதேசத்தின் திடீரென்று cell பேசுவது.


நீங்க ஆங்கில படங்களில் வரும் சருக்கள்கள் பற்றி ஒரு கேள்வியும் எழுப்புவதில்லை.Bourne ultimatum - நான் பார்த்தலே சுத்தமா பிடிக்காத படங்கள்ல இதுவும் ஒன்னு. அதுல ஒரு


காட்சி வரும் அதாவது அந்த hero யாருக்கும் எதுக்கும் பயப்படமாட்டான்.என்னென்னவோ பண்ணுவான்.ஆனா நாம அதை கேள்வி எழுப்ப மாட்டோம்.ஏன்னா அதுக்கு அவனே சொல்லிடுவான் அவன் பெரிய திறமைசாலின்னு. புரியலையா. ஒரு காட்சியில HERO ஓடுவான். திடீர்னு ஒரு hotel வழிய ஓடும் பொழுது அங்க ஒரு cloth (dining table) எடுத்துட்டு ஓடுவான். ஏன்னு நமக்கு யோசனையா இருக்கும். அப்ப ஒரு கண்ணாடி சில்லுகள் பதிக்கப்பட்ட ஒரு சுவர் வரும்.அவன் கையில இருக்கிற துனியை வெச்சி தாண்டுவான்.


உடனே என் பக்கத்துல உட்கார்ந்து படம் பார்த்துடிருந்த நண்பன் பயங்கரமா கைதட்டினான். தியேட்டரே கைதட்டுச்சி.அதாவது செம LOGIC.இதே காட்சிய தமிழ்படத்துல வெச்சிருந்தா துணியெல்லாம் இல்லாம வெறும் கையிலயே தாண்டிடுவான். இது தாங்க இவுங்க சொல்ற LOGIC சருக்கல்.இதுல ஒரு துளிகூட மனித எதார்த்தம் இல்லை. வெறும் ஒரு பொருள். கலை யில்லை. அடுத்த காட்சியல கண்ணாடி மேல கை வைக்கனும்னு முன்னாடி காட்சியில துணியை எடுத்துட்டு ஓடுறது ஒரு கட்டமைப்பு. இது கலை ஆகா.


இன்னும் புரியலைன்னா.ஆயிரத்தில் ஒருவன் ஒரு english படமா இருந்தா... எங்கிட்ட ஒரு cell phone இருக்கு. ரொம்ப புதிய ரகம். இதுல என்ன விஷயம்னா இது எந்த நாட்டுக்கு போனாலும் எந்த இடத்துக்குப்போனாலும் இது வேலைசெய்யும்னு hero வுடைய நண்பன் சொல்வன் (முதல் பாதியில). hero அதை வாங்கிட்டு வந்திருப்பார். இரண்டாவது பாதியில பயன் படுத்துவார். அப்ப உங்களுக்கெல்லாம் எந்த logic ம் இடிச்சிருக்காது. அட போங்கப்பா.



2. படத்தில் செம்மொழி என்ற பெயரில் சமஸ்கிரத்ததை தவிர்க முயற்சித்திருக்கிறார்கள். அந்த தமிழ் புரியவேயில்லை


சோழர் காலத்து தமிழ் தான் இந்த படத்துல பயன்பட்டிருக்கு. முதல்முறையா தமிழ்அறிஞர்களுடைய உதவியோடு அந்த மொழி முழுமைப்பெற்றிருக்கு. அதை கேட்டகும் போது எனக்கு இருந்த ஆனந்ததிற்கு அளவே இல்ல. அது மட்டுமில்லாம இந்த மொழி உருவாக்கத்துக்கு பின்னால இருக்கிற உழைப்பை மிகச்சாதரணமா நிராகரிக்க வார்த்தைகள் ,’ செந்தமிழ் வேணும்னு அகாரதியை தேடி எடுத்திருக்காய்ங்க போல’ ன்னு சொல்வது.http://vandhiyadevan.blogspot.com/ அந்த காலத்துல சமஸ்கிரதம் குறைவா பரவியிருக்கு. இன்னைக்கு தமிழ்ல தமிழை தான் தேடவேண்டியதா இருக்கு. முழுக்க முழுக்க சமஸ்கிரதமும் ஆங்கிலமும் தான். அதுக்கு வருத்தப்பட எந்த தமிழனும் இப்ப இல்லை. தன் பிள்ளைகளுக்கு பேர்வைக்கும் பொழுது தவறாம ஷ,ஹ,ஜ,ஸ இருக்கனும் பார்த்து பார்த்து பேர்வைக்கிறான் ஒவ்வொரு தமிழனும். (கருப்பன், முனியாண்டி, மாயான்டி, சங்கிலி முருகன், குனசாகரன் தமிழவன் நிலவன் etc..) இதெல்லாம் ஊரில் உள்ள படிப்பறிவில்லாத நம் மூதாதையர்களின் பெயர்கள்(!). உலகத்தலயே தன்மொழியில பேர் வெச்சிக்காத வெச்சிக்க விரும்பாத மற்றும் வெச்சிக்க அனுமதிக்கப்படாத ஒரே இனம் தமிழ் (திராவிட) இனம் தான்.



படத்தில் சுத்தமாக பிடிக்காதது



1.Graphics - பணம் போதியிருக்காது. 1000 கோடி ரூபாய் படங்களை பார்க்க தொடங்கிவிட்ட நம் கண்களுக்கு உள்ளூர் 36 கோடி ரூபாய் கடினம் தான்.


இது தான் நமக்கு சாத்தியம். இருந்தாலும் 36 கோடியில் இன்னும் திறமையோடு எடுத்திருக்கலாம் என்று திரை உலகு நண்பர்கள் கூறினார்கள்.


செல்வாவுக்கு graphics சம்பந்தமான அறிவு போதவில்லை என்பதே அடிப்படை காரணம் என்று தெரிகிறது. graphic பெரும்பாலும் தவிர்த்திருக்கலாம்.



2.நிறைய ஆங்கிலப்படங்களின் காட்சிகளை தழுவியது (அ) திருடியது



3.Editing : படம் பலமுறை முடிந்து முடிந்து தொடங்குவது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது கருப்புதிரை வந்து போகும் பொழுதெல்லாம்.



முக்கியமாக பாராட்டப்படவேண்டியவர்கள்



1. திரைக்கதை 0 செல்வா


2. தயாரிப்பாளர் (இந்த படத்தை எடுக்க பணமும் தேவை தைரியமும் தேவை)


3.துணை நடிகர்கள்


4.ART குழு


5.வைரமுத்து - பாடல்- வில்லாடிய


6.கார்த்தி (பெருசா image பார்க்காம அடிவாங்குறதும் etc..etc..)


7.ரீமா




Techincal குறைபாட்டை வைத்து ஒரு படத்தை அரைவேக்காடு என்று சொல்வது திரைப்படம் என்ற கலையை பற்றி அடிப்படையான தெளிவுகூட இல்லாமல் இருக்கிறோம் என்றே அர்த்தம். இது Indian Express and ஆனந்த விகடன் மக்களுக்கும் பொருந்தும்.



நன்றி


இராவணன்


14 :பின்னூட்டங்கள்:

pRaBhU January 21, 2010 at 12:03 PM  

இந்த மக்களுக்கு உரக்க சொல்லியே புரியாத இந்த தாபைத்தை செல்வா இப்படி சொன்னா புரியுமா?
நீ கொடிட்ட இடங்களை நான் ஈழஇத்தொட பதிவா உனறுல. ஆக தப்பு யாருடயுது?

மேதாவிதனமன விமர்சனங்கள் இவளவு வெகமா பரவுதே ஏன் நம்ம பேச்சு மட்டும் கூக்குரலகுது? நமக்கு சத்தம் பொட தேரியில.
இன்னும் உரக்கமா பேசனும்!

‍‍‍‍‍_ பிழைகளை மன்னிக்கவும்.

இராவணன் January 21, 2010 at 9:38 PM  

உரக்கப்பபேசுதலை விடவும் ஒரு விஷயத்தை propagandaவாக பரப்புவது மிக கடினமா இருக்கு. அதுல அவுங்க திறமையா இருக்காங்க.

சீக்கரம் மாறும் எல்லாமும்.மாற்றுவோம்.

உண்மைகளை பரவச்செய்வோம்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் January 21, 2010 at 11:51 PM  

நல்ல பதிவு. இத்திரைப்படத்தை இன்னும் பார்க்கவில்லை. ஏற்கனவே நண்பர்களின் கருத்தின்படி அற்புதமான படைப்பு என்கிற முடிவுக்கு வந்திருக்கிறேன். இப்படக்குழுவினரின் உழைப்புக்காகவேனும் இத்திரைப்படத்தைச் சிலமுறை பார்க்கவேண்டும்; பார்ப்பேன்.

-ப்ரியமுடன்
சேரல்

Unknown January 22, 2010 at 12:01 AM  

உரக்க பேசுவதினால் மட்டும் எதுவும் மாறாது...இலக்கு(ஈழம் ) மாற்றம் ஆனால் , பிரச்சனை தான் ...

அரைவேக்காடுகள் பற்றி கவலை கொள்ளாமல் , இலக்கு அடைவோம் வெகு விரைவிலே ...

இராவணன் January 22, 2010 at 12:21 AM  

மிக நன்றி தோழமை சேரல் மற்றும் சுதன்.

குப்பன்.யாஹூ January 22, 2010 at 5:01 AM  

other more points here:

1.The film director name is SELVA raagavan. Selvaa (tandhai selvaa) is the eelam fighter forerunner. There are 1000 tamil directors are available but why the directors choose SELVA raagavan.

2. The play back singer name is DANU sh. There are lot of singers are avaiable but the producer choose Dhanu sh (dhanu is the veerath tyaagi who assasinated Rajiv).

இராவணன் January 22, 2010 at 5:26 AM  

;)))))

நன்றி திருவாளர் குப்பன் அவர்களே

Mohan January 22, 2010 at 5:32 AM  

உங்களுடைய விமர்சனம் மனதிற்கு மிக நிறைவாகவும்,நெருக்கமாகவும் இருந்தது.

அ.பிரபாகரன் January 22, 2010 at 10:14 AM  

ஆயிரத்தில் ஒருவனுக்கும் ஈழப்பிரச்சனைக்கும் சம்பந்தம் இல்லை என்பவர்கள், "ச்சீ ச்சீ செவராகவனுக்கெல்லாம் ஈழப்பிரச்சனைப் பற்றிய அறிவு உணர்வெல்லாம் இருக்காது" என்றே நினைக்கிறார்கள்.

இந்திய இராணுவத்தின் இல்லாத மேன்மையை, பொய்யாக கட்டமைக்கும் இந்திய/தமிழ் சினிமாக்களுக்கு மத்தியில், இந்திய இராணுவம் நிகழ்த்தும் மனித உரிமை மீறல்களையும் பாலியல் வன்முறைகளையும் துணிச்சலாக பதிவு செய்த திரைப்படம் "ஆயிரத்தில் ஒருவன்". இந்த ஒரு விசயத்திற்காகவே நாம் செல்வாவை தலைமேல் தூக்கிவைத்துக் கொண்டாடலாம்.

இராவணன் January 22, 2010 at 10:32 PM  

உண்மை பிரபா. வெறுமே பெரியாரிசம் பேசும் சத்யராஜ் மற்றும் சத்தம் மட்டும் எழுப்பும் சீமானாலோ கண்டிப்பாக இதை செய்திருக்கமுடியுமா என்றால் சந்தேகமே.

மிக நன்றி மோகன்.

Oorsutri January 24, 2010 at 5:43 AM  

நான் பார்த்த ஆயிரத்தில் ஒருவனை மீண்டும பார்க்க இருக்கிறேன் ... உங்களது வார்த்தைகளை படித்த பின்.
நன்றி

இராவணன் January 24, 2010 at 11:15 AM  

மிக நன்றி ஊர்சுற்றி.

கண்டிப்பாக பாருங்கள்.
நானும் பார்க்கப்போகிறேன்

peevee January 24, 2010 at 8:17 PM  

Laksh... do u wanna read this review?
http://mercypensieve.blogspot.com/2010/01/blog-post.html

This is by a friend of mine.. just to share. I have not seen the movie yet. Will comment later.

இராவணன் January 25, 2010 at 8:38 PM  

thanks peevee. nice to see u here.
அவருடைய விமர்சனம் படிச்சேன்.
என்னுடையதை அவரை படிக்கச்சொல்லுங்க. பிறகு பேசுவோம் இது பற்றி நிறைய.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP