காதல்

மீண்டும்
நடுங்குகிறது தண்டவாளம்

மீண்டும்
இதயம் இரண்டாகும் சப்தம்
காதைக்கிழிக்கிறது

மீண்டும்
சில நிமிடங்களில்
நீளும்பார்வையில் கூசும்
வெறுமை

மீண்டும்
விரல்கள் மறைக்கும்
கண்ணீரம்

மீண்டும்
அமைதி

மீண்டும்
இன்னும் சில நிமிடங்களில்
நிச்சயமாய்
தெரியும்
தண்டவாளம் நடுங்கும்

5 :பின்னூட்டங்கள்:

MSK / Saravana August 4, 2008 at 10:42 AM  

மீண்டும்..
மீண்டும்....
இந்த காதல் ஒரு பைத்தியகாரத்தனம்.....

MSK / Saravana August 19, 2008 at 2:15 PM  

அடுத்த பதிவு எப்போது நண்பரே??

இராவணன் August 20, 2008 at 7:40 PM  

;))),

தெரியலை நண்ப.

sukan August 20, 2008 at 8:36 PM  

இணையாத இரு கோடுகளாக தண்டவாளம் இருந்தும் அதில் பயணிக்கும் தொடர் வண்டியின் பயன் மகத்தானது. காதல், பிரிவுகள், கண்ணீர், அனைத்திலும் இருந்து வாழ்வை நிதானப்படுத்த நிறைய பாடங்கள் கற்றுக்கொள்ளலாம். வாழ்வின் வலிகள் மிக சிறந்த ஆசான்.

MSK / Saravana August 22, 2008 at 10:45 AM  

வேலை பளுவா?? இல்லை அடுத்த கவிதை உருவாகவில்லையா??

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP