அன்பின் நிழல்

நிழல்களாலான
என் அறையின்
இருள்
உன் பயங்களுக்கும் கற்பனைகளுக்கும்
உணவாகிறது

முதலில் யன்னலை
பின்
கதவை திறந்து வைத்தேன்
உனக்கான
வெளிச்சம் தேடி
இப்பொழுது
அதன் சுவர்களை
இடித்துக்கொண்டிருக்கிறேன்

3 :பின்னூட்டங்கள்:

ச.பிரேம்குமார் August 30, 2008 at 6:41 AM  

இலக்குவண், அருமையா இருக்கு

MSK / Saravana September 1, 2008 at 11:29 AM  

எப்போதும் போல் மிக மிக அருமையான மனதிற்கு நெருக்கமான கவிதை..
:)

ny June 12, 2009 at 8:38 AM  

நெகிழ்விக்கிறீர்கள

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP