மனோநிலை - 2

ஆத்மநாம் கவிதைகள் என்னை மிகவும் பாதித்தவை.

என் (என்னை போன்ற பிறநண்பர்கள்) இன்றைய மனநிலையே அப்படியே உணர்த்தும் இந்த கவிதையை அகநாழிகை பதிவில் படித்தேன்.


ஏதாவது செய் - ஆத்மாநாம்

ஏதாவது செய் ஏதாவது செய்
உன் சகோதரன்
பைத்தியமாக்கப்படுகிறான்
உன் சகோதரி
நடுத்தெருவில் கற்பிழக்கிறாள் சக்தியற்று
வேடிக்கை பார்க்கிறாய் நீ
ஏதாவது செய் ஏதாவது செய்
கண்டிக்க வேண்டாமா
அடி உதை விரட்டிச்செல்
ஊர்வலம் போ பேரணி நடத்து
ஏதாவது செய் ஏதாவது செய்
கூட்டம் கூட்டலாம்
மக்களிடம் விளக்கலாம்
அவர்கள் கலையுமுன்
வேசியின் மக்களே
எனக் கூவலாம்
ஏதாவது செய் ஏதாவது செய்
சக்தியற்று செய்யத்தவறினால்
உன்மனம் உன்னைச் சும்மா விடாது
சரித்திரம் இக்கணம் இரண்டும் உன்னை
பேடி என்றும்
வீர்ய மிழந்தவன் என்றும்
குத்திக் காட்டும்
இளிச்ச வாயர்கள் மீது
எரிந்து விழச்செய்யும்
ஆத்திரப்படு
கோபப்படு
கையில் கிடைத்த புல்லை எடுத்து
குண்டர்கள் வயிற்றைக் கிழி
உன் சகவாசிகளின் கிறுக்குத்தனத்தில்
தின்று கொழிப்பவரை
ஏதாவது செய் ஏதாவது செய்

--ஆத்மநாம்

1 :பின்னூட்டங்கள்:

நந்தாகுமாரன் May 25, 2009 at 4:08 AM  

Gunter Grass-இன் Do Something என்ற கவிதையின் பாதிப்பில் இது எழுதப்பட்டது என்று ஆத்மாநாமே சொல்லியிருப்பதாக அறிகிறேன். எனக்குப் பிடித்த கவிஞர் ஆத்மாநாமின் பிடித்த கவிதைகளுள் இதுவும் ஒன்று.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP