தனித்திருத்தல்

மிக அருகாமையில்
கொஞ்சம் கொஞ்சமாய்
உலர்ந்து கொண்டிருக்கிறது
அந்த உயிர்


இறுகிய இமைகளை
அதிர்ந்து திறக்கின்றேன்
பார்வையை மறைக்கிறது
கனவுகளின் கறை

சிங்கத்தின் குகையில்
மொழியிழந்த
வவ்வால் ஒன்று
தனித்து தொங்கிக்கொண்டிருக்கிறது
இன்றும்

2 :பின்னூட்டங்கள்:

MSK / Saravana May 22, 2008 at 1:44 AM  

"சிங்கத்தின் குகையில்
மொழியிழந்த
வவ்வால் ஒன்று
தனித்து தொங்கிக்கொண்டிருக்கிறது
இன்றும்"

மிக அருமை நண்பரே...

Dreamzz May 26, 2008 at 7:45 AM  

ஹ்ம்ம்... :)

தனித்திருத்தல் வரமாகவும் இருக்கலாமே :)

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP