விடாது துரத்தும் கேள்விகள்
என்னை தொடர் பதிவிற்கு அழைத்த லாவண்யாவிற்கு நன்றி.
1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
லஷ்மண் ஆக பிறந்து இலக்குவனாகி இப்பொழுது இராவணன்
2.கடைசியாக அழுதது எப்பொழுது?
கண்கள் கலங்குவது என்றால் சில இரவுகளுக்கு முன் மிகுந்த மகிழ்ச்சியில் ஒரு தாலாட்டின் நீட்சியாக
மனம் கலங்குவது என்றால் இந்த நொடியில் கூட. யார் கல் எறிந்தார்கள் என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
சத்தி்யமா இல்லை ;)
4.பிடித்த மதிய உணவு என்ன?
முருங்கை சாம்பார் ;)
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
ம்ம்ம். துளிர்த்து வேர்த்து (வியர்த்து அல்ல) பின் வீழ்ந்தும் விடும் சில நாட்களிலே.
சிலவைகையல் நீண்டு கொண்டே இருக்கிறது என் பாதையில் துனையாக நிழலாகவும்.
பெரும்பாலான உறவுகள் உடனே தொடங்கியது தான் (வாழ்க்கை மிக சிறியது மக்களே)
6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடல் பிடிக்கும் (பழவேற்காடு கரையில்)
அருவி - எனக்கும் அதற்குமான உறவு மிக உன்னதமானது. குளிக்க மட்டுமல்ல குதிக்ககூட விரும்புவேன்
அதி்ரபல்லி(கேரளா) மற்றும் high forest (வால் பாறை)
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
அறிமுகமற்ற ஆண் - உடல் அசைவுகள் (body language)
அறிமுகமற்ற பெண் - கண் , முகம் மற்றும் முலை
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்சது : உண்மைக்குள் ஒளிய முயற்சிப்பது
பிடிக்காதது: பொய்சொல்ல முயற்சித்து (அலுவலகத்தில் மட்டும்) தோற்பது
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
சரி பாதி யாருன்னு தேடி சலிச்சிட்டேன். நீங்க வேற.
10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்?
யாரும் பக்கதுல இல்லைன்னா வருந்துவேன்
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
அடப்போங்கப்பா. ;)
12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க?
சில சமயம் விளையாட்டாய் உன் ஆடைக்குள்ளே நான் வேண்டும் :))) (radio mirchi)
13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வானத்தின் நீலம்
14.பிடித்த மணம்?
பெண்களின் வாசனை திரவியங்கள்
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன?
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
பதி்விடப்படாத கவிதை ஒன்று
17. பிடித்த விளையாட்டு?
விளையாட்டு என்பது உன் அருகாமையை நான் கொண்டாடுவதே (காடு- ஜெ.மோ)
18.கண்ணாடி அணிபவரா?
இப்ப இல்ல.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
ingmar bergman and micheal angel antonioni
மகேந்திரன்
20.கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க (அருமை.)
21.பிடித்த பருவ காலம் எது?
உன் அருகாமையோடு எல்லா காலமும்.எல்லா பருவமும் அழகுதானே.
22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?
ஆத்மாநாம் கவிதைகள் (மீள் வாசிப்பு)
நீராலானது. (மனுஷ்யபுத்திரன்)(மீள் வாசிப்பு)
23.உங்கள் டெஸ்க்டாப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
எனக்கு பிடித்த புகைப்படம் எடுக்கும் பொழுது
24.உங்களுக்கு பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது:மௌனம் மட்டும் மௌன ராகம்
பிடிக்காதது: எனக்கு புரியாத மொழியில்
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
rajasthan
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தனிமை கொடுத்த திறமை நிறைய இருக்கு.
காலம் திசைகாட்டுமென காத்திருக்கிறேன்
புகைப்படம்
கவிதை
திரைக்கதை
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
பிரிவு
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
காமம்
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
அதிரபள்ளி அருவி
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
உயிர்ப்போடு
31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்?
மனைவி இல்லாதவங்க கிட்ட இப்படி கேட்டா அப்புறம் dont plug words from my mouths :)
32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
கனவுக்கும் நினைவுக்கும் இடையே ஆடிக்கொண்டிருக்கும் ஒரு கடிகாரம்
10 :பின்னூட்டங்கள்:
nice னு ஒரே வார்த்தையில் சொல்லிவிட்டுச் செல்ல முடியாத பதில்கள்!!!!
மிக நன்றி சிவாஜி வரவிற்கும் கருத்திற்கும்.
சில பல காரணத்தால ஒரு வார்த்தையை மட்டுத் இப்ப censor பண்ணிட்டேன் :(
அருமையான பதில்கள் நண்பா, எல்லா பதில்களையும் ரசித்தேன்.
உன்னையயும் மாட்டி விட்டாங்களா?? :). சில பதில்கள் சுவாரசியமா இருந்துச்சு
அப்புறம் 15ம் கேள்விய சாய்ஸ்ல விட்டாச்சா?
மிக நன்றி நண்பர்களே.
ஆமாம்.15 வது யாரைக்கூப்பிடன்னு தெரியல.
நன்றி லஷ்மண். முகத்திலறையும் பதில்கள்
இராவணன்,
நல்ல பதில்கள்.
‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்
மணி"ரத்ன" சுருக்கமா சொல்லீட்டீங்க கலக்கல் :)
மிக நன்றி லாவண்யா
மிக நன்றிங்க வாசு
மிக நன்றி காணா.
வெளிப்படையாக பேசியிருந்தது ரசித்தேன்.
Post a Comment