இராவணன்
எல்லோருக்கும் ஒரு முக்கிய அறிவிப்பு.இன்று முதல் மகாகவி திரு. இலக்குவண் அவர்கள் இராவணன் என்றே அழைக்கப்படுவார் ;)))
அன்புடைய நண்பர்களுக்கு,
இன்று முதல் என்னுடைய பெயரை இராவணன் என்று மாற்றியமைக்கிறேன்.அவ்வாறே என்னை அனைவரும் அழைக்கவேணும் என்றும் விரும்புகிறேன்.
பெயரில் என்ன இருக்கிறது?.
உண்மைதான்.
இருந்தும் இலக்குவண்(லஷ்மண்) என்ற புனித அடையாளம் முகமூடி போல சுமையாய் இருக்கிறது.இராவணன் என்பது எனக்கும் என் வாழ்விற்கும்மிகவும் நெருக்கமானதாகவும் ஒரு மனித அடையாளமாகவும் என் மொழி அடையாளமாகவும் இருப்பதாக தோன்றுகிறது.
நன்றி
பி.குறிப்பு : இங்கே புனிதம் என்பது பொது புத்தி சார்ந்த புனிதத்தை குறிப்பதே அன்றி
எந்த வார்த்தையிலும் இராவணனை தரம் தாழ்த்தி கூறுபவை அல்ல. இராவணனை மதிப்பதால் தான் அந்த பெயரை பெருமையுடன் ஏற்கிறேன்
9 :பின்னூட்டங்கள்:
மகிழ்ச்சி, இராவணன் என்ற பெயரும் புனித அடையாளந்தான், ராம இலக்குமணர்களை விடவும் இராவணன் குணத்தில் மேன்மையானவன். வாழ்த்துகள்.
:)
கவிதைகள் இராவணன் தனமா இல்லை!
பெயரில எவ்வளவோ இருக்கு இலக்குவன். அது வேற கதை.
யாத்ரா
மிக நன்றி :)
உற்சின்
மிக நன்றி. உங்கள் பெயர் தான் புரியவில்லை ;)
புதுப் பெயர் மிக நன்று. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. புது முகத்தோடு தொடருங்கள் உங்கள் கவிதைப் பயணத்தை.
-ப்ரியமுடன்
சேரல்
மிக நன்றி சேரல்.
// இலக்குவண்(லஷ்மண்) என்ற புனித அடையாளம் முகமூடி போல சுமையாய் இருக்கிறது //
// இங்கே புனிதம் என்பது பொது புத்தி சார்ந்த புனிதத்தை குறிப்பதே அன்றி
எந்த வார்த்தையிலும் //
லூசாப்பா நீ?!
இலக்குவண்(லஷ்மண்)எனும் பொது புத்தி சார்ந்த புனித பிம்பத்தின் பெயரை வைத்துக்கொண்டு பொது புத்தி சார்ந்த புனிதங்களை எழுத்தின் மூலம் உடைத்து கொண்டிருந்தால் பின் நவீனத்துவவாதி ஆகியிருக்கலாம். அதற்கான ஓர் வாய்ப்பை ஒரு நவீன பெயரை வைத்துக் கொண்டதின் மூலம் இழந்தது விட்டீர்கள் மேலும்...
போதும் முடியலே. :-)
அமாம், பெயரில் என்ன இருக்கிறது?
உண்மையில் மிக நன்றாக இருக்கிறது இந்தப் பதிவு அல்லது கடிதம். புகழ்ச்சிக்காகச் சொல்லவில்லை. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
பெயரில் என்ன இருக்கிறது? என்றாலும் பெயரில் இருக்கிறது ஏதோ.
நானும் உங்கள் பின்னூட்டத்தை பார்த்து குழம்பிவிட்டேன். தொடருங்கள் நண்பரே.
Post a Comment