கால பைரவன் கண்சிமிட்டுகிறான்
பெரிதும் நிராகரிக்கபட்டவள்
ஒரு
அடிமையைக் கண்டடைகிறாள்
வேசிகள் என்று
இழிந்து திரிந்தவன்
கண்கள் பனிக்க
குழந்தையைத் தீண்டுகிறான்
காதலிக்கச்சொல்லிக் கெஞ்சியவன்
ஆழ்ந்து உறங்குகிறான்
எல்லோருக்கும்
அண்ணனாக வலம்வந்தவன்
நீலப்படங்களைத் தேடி அலைகிறான்
மென்முலைகள்
பெருத்துப் பாலூட்டி ஆகின்றன
என் இரவுகள்
சில
தினங்களுக்கு முன்
அழகாக இருந்தன
இந்த கவிதை வா.மு கோ.மு உடைய பாதிப்பு- சொல்லக்கூசும் கவிதைகள்
9 :பின்னூட்டங்கள்:
புரியுது ஆனா புரியல :(
\\எல்லோருக்கும்
அண்ணனாக வலம்வந்தவன்
நீலப்படங்களைத் தேடி அலைகிறான்\\
\\என் இரவுகள்
சில
தினங்களுக்கு முன்
அழகாக இருந்தன\\
:)))
கவிதை மிகவும் பிடித்திருக்கிறது.
//எல்லோரையும்
வேசியென்றவன்
கண்கள் பணிக்க
குழந்தையைத் தீண்டுகிறேன்//
வேசியென்றவன் ஒருவன்
குழந்தையைத் தீண்டுகிறான் என்றுதானே வரும் நண்ப!?
கண்கள் ப"னி"க்க.
நல்லா இருக்குங்க கவிதை,
ரொம்ப பிடித்திருந்தது. வரிகள் தேர்ந்தெடுத்து கோர்த்திருக்கின்றீர்கள்.
அருமை!
வார்த்தைகளில் தீர்க்கமும், தெளிவும் நிறையவே இருக்கின்றன.
-ப்ரியமுடன்
சேரல்
யாத்ரா சொல்வது போல் தனித்தனி வரிகளே கவிதையாக பொருள் தருகிறது. ஆனால் மொத்தமாக படிக்கும் போது ஒரு தொடர்ச்சி இல்லை என்பது போல் என்னளவில் உணர்கிறேன்.
கொஞ்சம் விளக்குங்கள் நண்பரே.
மிக நன்றி அனைத்து நண்பர்களின் வார்த்தைகளுக்கும் வரவிற்கும்.
அன்புள்ள மண்குதி்ரை
மிக ஆழமான மாற்றங்களில் சிக்குண்டிருக்கிறேன்.
அதை வெளிப்படுத்த மு்யலும் பொழுது என்னை சுற்றி
நிகழும் மாற்றங்களை பதிவு செய்ய நினைதேன்.
நண்பர்களின் (ஆண் பெண் இருவகையும்) திருமணத்திற்கு முன் பின் அவர்களி்ல் நான் கண்ட மாற்றங்களை பதிவு செய்வதன் மூலம் என் மாற்றத்தின் ஆழத்தை உணர்த்த முடியும் என்று எண்ணினேன்.
என் கருத்துக்கு மதிப்பளித்ததற்கு நன்றி.
வாழ்த்துக்கள் நண்பரே.
கவிதை நன்றாக உள்ளது.
//இந்த கவிதை வா.மு. கோமு உடைய பாதிப்பு- சொல்லக்கூசும் கவிதைகள்//
கோமு அண்ணன் அறிந்தால் மிகவும் மகிழ்வார்.
Post a Comment