ஒரு பறவை ஒரு கிளை
ஒரு கிளையில்
ஒரு பறவை
வந்தஅமர்ந்து
அன்பைப்
பாடுகிறது
பறவை
கூடுகட்டலாம்
இனி
கிளைப்
பறவையாகி
உடன் பறக்கலாம்
சில
உண்மைகள்
பறவை
கிழக்கில் இருந்து
வந்தது
கிளை
கூடுகளற்றது
ஒரு கிளையில்
ஒரு பறவை
வந்தஅமர்ந்து
அன்பைப்
பாடுகிறது
பறவை
கூடுகட்டலாம்
இனி
கிளைப்
பறவையாகி
உடன் பறக்கலாம்
சில
உண்மைகள்
பறவை
கிழக்கில் இருந்து
வந்தது
கிளை
கூடுகளற்றது
© Blogger templates Palm by Ourblogtemplates.com 2008
Back to TOP
4 :பின்னூட்டங்கள்:
\\பறவை
கிழக்கில் இருந்து
வந்தது
கிளை
கூடுகளற்றது\\
மகிழ்ச்சி, வாழ்த்துகள், இவ்வளவு நாளும் கிளையில் எந்தக் கூடுமில்லையா,
இல்லை அன்பைப் பாடுகிற பறவைக்காக, கவிஞனின் வழக்கமான குணமான பொய்யைச் சொல்கிறீர்களா
பறவை இந்த பின்னூட்டத்தை படிக்காமலிருக்க வேண்டிக்கொள்கிறேன்.
கவிதையின் வெகு உள்ளே சென்றுவிட்டேன், மிகவும் பிடித்திருக்கிறது கவிதை.
மிக நன்றி யாத்ரா தங்கள் வருகைக்கும் வார்த்தைகளுக்கும்.
என் கவிதைகள் என் நாட்க்குறிப்புகள்.
என் உண்மைகள்
மற்றும் நான் தேடும் உண்மைகள்.
கவிதைக்கு பொய் அழகு என்று சொல்லும் பித்தர்களை நான் கவி்ஞர்களாக பார்பத்தில்லை.
ART is an extension of life. (tolstoy)
மிக நன்றி.மீண்டும் வாருங்கள்
ரசித்தேன் நண்பரே!
//கவிதைக்கு பொய் அழகு என்று சொல்லும் பித்தர்களை நான் கவி்ஞர்களாக பார்பத்தில்லை.//
இந்த வரிகளை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது, 'முழுவதும்' ஏற்றுக்கொள்ள முடிய வில்லை என்றாலும் :)
-ப்ரியமுடன்
சேரல்
அழகான கவிதை நண்பா!
கிளைகள் எப்பொழுதும் பறவைகளுக்காகத்தான் காத்திருக்கின்றன. அவைகளுக்காகவே துளிர்க்கவும் செய்யும்..அவற்றின் கூடுகளை மறைக்கவும் செய்யும். :)
Post a Comment