வழி தவறிய மீன்கள்
வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்
இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை
தத்தம் வழியில்
மரணம் நோக்கி
தொடர்கின்றன
ஒரு கைப்பற்றுதலோ
ஒரு முத்தமோ
நிகழ்ந்திருந்தால்
ஒருவேளை
கடல்
அற்றும்
வாழ்ந்திருக்கக்கூடும்
வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்
இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை
தத்தம் வழியில்
மரணம் நோக்கி
தொடர்கின்றன
ஒரு கைப்பற்றுதலோ
ஒரு முத்தமோ
நிகழ்ந்திருந்தால்
ஒருவேளை
கடல்
அற்றும்
வாழ்ந்திருக்கக்கூடும்
© Blogger templates Palm by Ourblogtemplates.com 2008
Back to TOP
16 :பின்னூட்டங்கள்:
இலக்குவண், மிக அழகான கவிதை இது.
//இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை//
மனதை மிகவும் கவர்ந்தது இந்த வரிகள் :)
கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.. வாழ்த்துக்கள்..
மிக நன்றி பிரேம் மற்றும் கார்த்திகைப்பாண்டியன்.
மிக அருமையா இருக்கு இலக்குவன்.. அட்டகாசமா இருக்கு.
\\வாழ்ந்திருக்கக்கூடும்\\
வலி நிரம்பியதாயிருக்கிறது.
பிரேம் அண்ணா தளத்திலிருந்து வந்தேன்.. கவிதை வெகு அழகு.. ஆழமும்.. :)))
மிக நன்றி சரவணா,யாத்ரா மற்றும் ஸிமதிக்கு.
மீண்டும் வரவும்.
நீண்ட நாளைக்குப் பிறகு கவிதை எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது. இனி என்னதான் செய்யமுடியும்? கவிதைகளை, கதைகளை எழுதிக்கொண்டிருப்பதைத் தவிர.
மிக அருமையா இருக்கு இலக்குவன்..
மிக நன்றி சென்ஷி
புரிந்தும் புரியாததுபோல் இருந்தது.தமிழ் நதியின் வரிகள் ஒரு கோணத்தைக் கொடுத்தது. ரொம்ப நல்லா வந்திருக்கு.
@ச.முத்துவேல்:
ஒவ்வொரு பருவத்திலும் ஏதோ ஒரு கடலுக்கு நாம் மீனாகிறோம்.
:)
உங்கள் வலைப்பூவை அறிமுகப்படுத்திய நண்பர் பிரேம்குமாருக்கு என் நன்றிகள் உரித்தாகட்டும். இந்தக் கவிதைக்குச் சொந்தக்காரர் நீங்கள் என்று தெரிந்த பின் என் மனங்கவர்ந்த கவிஞர்களில் ஒருவராகி விட்டீர்கள்.
//வழி தவறிய
மீன்கள்
சந்தித்துக் கொண்டன
மணல்வெளியில்
இரண்டிடமும்
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை//
நண்பனொருவன் மின்னஞ்சலில் இந்தக் கவிதையை அனுப்பி வைத்தான். படித்துவிட்டு அமைதியாக உட்கார்ந்திருந்தேன். என்னை மிகவும் பாதித்த கவிதைகளுள் ஒன்று இது. 'ரசிப்போர்' இல் என்னையும் இணைத்துக் கொண்டேன். இது போன்று பல படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறேன்.
-ப்ரியமுடன்
சேரல்
மிக நன்றி சேரல்.
இந்த கவிதை என்னை பல வகையில்
ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
அதைபற்றி விரைவில் பதிவிடுகிறேன்.
கடல் பற்றிய கதையிருந்தது
கடல் இல்லை
இங்கே கதைகள் கூடாத இல்லாத காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ...
அருமை இராவணன் ...
உங்கள் கவிதை ஆழ்மனதில் இருந்த மீன்களை எட்டிப்பார்க்க வைக்கிறது ...
Post a Comment