ஒரு புன்னகை

உடன் பகிர்ந்து விட
இயலாத ஒரு புன்னகை
சிதறி கிடக்கிறது
பூக்களாய்
பிணம் சென்ற
வழியெல்லாம்

வெறும்
அடையாளமாகவும்
தனித்தும்
நிராகரிப்பின் வலியோடும்

எந்த பிரக்ஞையுமற்று
மெல்ல
மேற்கு நோக்கி
நகர்கிறது சூரியன்

5 comments:

  1. nalla varthai amaipu
    kavidhai was nice

    ReplyDelete
  2. விரக்தி ஒவ்வொரு வரிகளிலும்!

    'கண்டும் காணாமல்... ஆனாலும் இந்த சூரியன் ரொம்ப மோசம்

    ReplyDelete
  3. உடல் சென்ற வழியெல்லாம் சிதறிக்கிடக்கும் பூக்கள் - எதையும் கண்டு கொள்ளாமல் கடமையே கண்ணாகப் பகலவன் - பூக்களும் கடமையைத்தான் செய்கின்றன என உணர்த்துகிறானோ

    ReplyDelete
  4. very good lines :-) Keep posting more :-)

    ReplyDelete
  5. "உடன் பகிர்ந்து விட
    இயலாத ஒரு புன்னகை
    சிதறி கிடக்கிறது
    பூக்களாய்
    பிணம் சென்ற
    வழியெல்லாம்

    வெறும்
    அடையாளமாகவும்
    தனித்தும்
    நிராகரிப்பின் வலியோடும்

    எந்த பிரக்ஞையுமற்று
    மெல்ல
    மேற்கு நோக்கி
    நகர்கிறது சூரியன்"


    மிக மிக அருமை நண்பரே..

    ReplyDelete