பின்பனிக்காலம் ,100 அடி சாலை, காலை ஒன்பது மணி

உலகெலாம்
உடல்கலாயின

அடைப்புக்குறிகளாய்
ஆடைகள்

முத்தம் தூண்டும்
இதழ்கள்

வழி நெடுகும்
முலைகள்
மெட்டிகள்
மி்கச்சில முகங்கள்

உயிர் கூச
இமைகளை மூடி
கண்களை
புதைக்கிறேன்
நினைவுத்தூண்களில்
கோயில் சிலைகள்
வழிபட யாருமற்று
வளரத்துவங்குகிறது
கடவுளின் அழகியலோடு
லிங்கம் ஒன்று


நீயற்ற பொழுதில்
உலகமெல்லாம்
வெறும்
உடல்கலாயின

3 :பின்னூட்டங்கள்:

ஆதவா February 9, 2009 at 6:06 AM  

ஏதோ சொல்ல வாரீங்க... ஆனா நமக்குத்தான் ஒண்ணும் புரிபடல.... எனிவே கோ அஹெட்

ஸ்ரீசரண் February 9, 2009 at 7:58 AM  

//இமைகளை மூடி
கண்களை
புதைக்கிறேன்
//

nice

சித்தாந்தன் March 8, 2009 at 12:12 AM  

எதைப் புதைத்தாலென்ன .மனமென்னும் புதிர் அவிழ்க்கப்பட முடியாததாய் இன்னும் இருக்கிறது.

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP