இந்த சில மனிதர்கள்

முன்பின் கதவுகளை மூடியாயிற்று
யன்னல்களையும் சேர்த்து

உள்ஊடுறவும் வெளிச்சம் மறைக்க
இமைகளை இறுக்கிக்கொள்கிறேன்

என்னுடையதானது
உலகம்
சற்றே
பாதுகாப்பானதாகவும்

மெல்ல
மிக மெல்ல
சப்தமிடதொடங்குகிறது
மனதின் வெறுமை
வயிற்றை அடைந்து

இனி இந்த நாளை
இந்த மனிதர்களை
இவர்களுக்கான சில பல வார்தைகளை
மூடிய கதவைத்திறப்பது போல்
கவனத்துடன்
வெளியேற்றவேண்டும்

முன் மூடியிருந்ததற்கான அடையாளங்களை
யாருமறியுமுன் துடைத்தெரியவும்

2 :பின்னூட்டங்கள்:

Saravana Kumar MSK November 15, 2008 at 10:23 AM  

//இனி இந்த நாளை
இந்த மனிதர்களை
இவர்களுக்கான சில பல வார்தைகளை
மூடிய கதவைத்திறப்பது போல்
கவனத்துடன்
வெளியேற்றவேண்டும்

முன் மூடியிருந்ததற்கான அடையாளங்களை
யாருமறியுமுன் துடைத்தெரியவும்//

அருமை.. மிக அருமை.. மீண்டும் மீண்டும் சில முறை படித்தேன்..

kumar December 16, 2008 at 6:05 PM  

Very good Tamil Verses of yours to enjoy.
R.C.Palaniappan

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP