மீண்டும் உன்னை நெருங்குகிறேன்
குழந்தையின்
மெல்லிய விரல்கள்
விளையாட்டின் அழகியலோடு
குரூரமாய் என்
பூக்களை பிய்த்தெறிந்தன
சாலையில் விழுந்த
அதன் இதழ்கள் மேல்
நடிகனைப்போல புன்னகைத்து நடக்கையில்
மென்மையும அருவருப்பும்
ஒருசேர
பாதங்கள் உணர்ந்தன
இறந்த பெண்ணின்
உடலைப் புணரும் இச்சையோடு
பேச தொடங்கினேன்
உன்னிடம்
நலமா
6 :பின்னூட்டங்கள்:
"இறந்த பெண்ணைப் புணரும் இச்சையோடு"
குரூர அழகியல் கவிதையில் இப்போதெல்லாம் அதிகமாகிவருகிறது. இல்லையா லக்ஷ்மன். நான் குரூரத்தை அழகாக எழுதுவதாக சுந்தர் என்பவர் சொல்லியிருந்தார். ஆனால், ஏற்கெனவே பேசப்பட்ட படிமங்கள் கவிதையில் வருவதைத் தவிர்த்திடுங்கள் லக்ஷ்மண்.
அனுபவங்கள் தானே எழுத்தை குரூரமாக்குகின்றன..
நான் இந்த படிமங்களை படித்ததில்லை.இனி கவனத்தில் கொள்கிறேன் தமிழ்நதி. மிக நன்றி.
//குழந்தையின்
மெல்லிய விரல்கள்
விளையாட்டின் அழகியலோடு
குரூரமாய் என்
பூக்களை பிய்த்தெறிந்தன
//
ஹ்ம்ம்... வாழ்க்கையே ஒரு குரூர அழகியல் தானே...
கவிதை அழகாய் இருக்கிறது (;))
அடுத்த பதிவு எப்போது நண்பரே..? வெகு நாளாகிவிட்டது..
nanRi dreams and saravana.
@saravana:- kavithai ezuthara alavukku mosama onnum nadanthurala ;).athhu thaan reason.
viravil ethirpaarkalam..
thanks saravana for asking.
Post a Comment