இப்பொழுதெல்லாம்

இப்பொழுதெல்லாம்
விடியல்
என் வாயிலுக்கு
பிச்சைப்பாத்திரத்தோடு
அந்தக்குழந்தையை
அனுப்பிவைக்கிறது
ஏக்கம் தோய்ந்த பார்வையோடும்

பழங்களையும்
சில கிழமைகளில் என் மதுவையும்
பகிர்ந்தளித்தேன்

இன்று
இவையெதிலும்
அந்தப்பாத்திரம்
நிறம்பவில்லை

ஏக்கம் தோய்ந்த
அந்த முகத்தை
எதிர்கொள்ளவியலாது தகிக்கிறேன்

என் விரல்களால்
மெதுவாய்
நஞ்சின் ஒரு துளியை
கலந்தளிக்கிறேன்

மதுவின் மாறிய வண்ணத்தில்
முகம் மலர்ந்த குழந்தை
மதுவருந்தி விலகியது

நாளைய விடியலில்
மீண்டும் வரலாம்

அந்தப்பாத்திரம்
அந்தப்பார்வை
இரத்தம் வழிந்த அதன் உதடுகள்

இப்பொழுதெல்லாம்
இரவை விட
விடியலை எதிர்கொள்வது
கடினமாய் இருக்கிறது

6 :பின்னூட்டங்கள்:

Dreamzz March 23, 2008 at 10:08 AM  

hmmm... deep lines..
ennatha solla..

இராவணன் March 23, 2008 at 8:27 PM  

மிக நன்றி உணர்தலுக்கும் தொடர்வருகைக்கும்.

Iyappan Krishnan March 23, 2008 at 11:16 PM  

என்னாச்சு இலக்குவன்?

காயத்ரி சித்தார்த் March 28, 2008 at 8:37 AM  

//இப்பொழுதெல்லாம்
இரவை விட
விடியலை எதிர்கொள்வது
கடினமாய் இருக்கிறது//

ரொம்பவும் உணர்வுபூர்வமா இருக்குங்க லக்ஷ்மண்.

Anonymous May 12, 2008 at 10:49 PM  

Romba nalla irukku... ovvoru murai padikkum pothum ovvoru artham puriyuthu... irundhalum neenga endha context sollirukkeenga -nu yosikka mudiyala... Good lines :-)

MSK / Saravana May 22, 2008 at 1:45 AM  

"இப்பொழுதெல்லாம்
இரவை விட
விடியலை எதிர்கொள்வது
கடினமாய் இருக்கிறது"

உண்மை நண்பரே...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP