நவீன ஓவியங்கள் பார்வைக்கு மட்டுமே

வீட்டை சுத்தம் செய்தபொழுது
ஒரு நவீன ஓவியம் கண்டெடுத்தேன்!
பல வண்ணங்களினாலானது!

சில வண்ணங்கள் மிகவும் அடர்த்தியாய்
சில மிக அழகாய்
சிலவைகள் தூசி படிந்து
ஒவ்வொறு வண்ணமும்
என்னை எனக்கு காட்டிக்கொண்டு கண்ணாடியைப்போல !

என் கண்கள் எல்லாவற்றையுமே நோக்குகிறது
ஒரு கடவுளை பார்ப்பது போல தன்னை மூடிக்கொண்டு!
அதை அந்த வண்ணங்கள் அறிந்திருக்கவில்லை!

ஓவியத்தின் இடையில் சில கோடுகளால்
பார்வை தடுமாறியது!
எல்லைகளைப்போல!பண்பாட்டைப் போல.
யாரோ எதற்கோ உருவாக்கியது அந்த கோடுகள்!
அந்த யாரோ நானகவும் இருக்கலாம்!
சில வண்ணங்கள் உடல் ஊடுருவும்
கத்தியைப்போல பிற வண்ணங்களுக்குள்
தம்மை நீட்டிக்கொள்கிறது எல்லைக்கோடுகள் கடந்தும்!


இப்படி சில வீடுகளும் சில ஓவியங்களும்
நானும் இருக்கும் ஒரு பாதையை
வழிச்சுமையாய் கொண்டு தொடர்கிறேன் வேறொருபாதையில்!

கைதவறி கீழ்வைத்துவிட
சுமந்து வந்த பாதை
ஒரு வேகத்தடையாய் சுருங்கி
வழிவிட மறுக்கிறது இப்பொழுது!

அறிவாளியாய்
வேகத்தை குறைத்து
தாண்டிச்செல்ல மனம் ஏனோ தான் மறுக்கிறது!

3 :பின்னூட்டங்கள்:

M.Rishan Shareef February 13, 2008 at 9:31 AM  

பால்யத்தைத் தாண்டிப் பின் வரும் நாட்களில் ஒவ்வொரு பருவமும் ஏன் ஒவ்வொரு விழிநோக்கும் கூட ஒவ்வொரு வண்ணங்களாலேயே ஆனதாக இருக்கும்...
சில நேரங்களில் பிடித்தவண்ணங்கள்...
சில நேரங்களில்...

கவிதை அழகு இலக்குவண்.

MSK / Saravana May 19, 2008 at 12:40 AM  

சத்தியமாய் என்னிடம் வார்த்தைகளே இல்லை நண்பரே..
பின்னீட்டீங்க..

ரகசிய சிநேகிதி June 6, 2010 at 10:13 PM  

”ஓவியத்தின் இடையில் சில கோடுகளால்
பார்வை தடுமாறியது!
எல்லைகளைப்போல!பண்பாட்டைப் போல”

மிக அருமை இந்த வரிகள்...

  © Blogger templates Palm by Ourblogtemplates.com 2008

Back to TOP