அன்பின் நிழல்

நிழல்களாலான
என் அறையின்
இருள்
உன் பயங்களுக்கும் கற்பனைகளுக்கும்
உணவாகிறது

முதலில் யன்னலை
பின்
கதவை திறந்து வைத்தேன்
உனக்கான
வெளிச்சம் தேடி
இப்பொழுது
அதன் சுவர்களை
இடித்துக்கொண்டிருக்கிறேன்

3 comments:

  1. இலக்குவண், அருமையா இருக்கு

    ReplyDelete
  2. எப்போதும் போல் மிக மிக அருமையான மனதிற்கு நெருக்கமான கவிதை..
    :)

    ReplyDelete
  3. நெகிழ்விக்கிறீர்கள

    ReplyDelete