தவறு யாருடையது

இன்னது என் பெயர்
கோயிலில் சந்தித்தோம்
உயரம் அதிகம்
வெண்ணிற உடை
சிறிய கண்கள்
சென்னைத்தமிழ்
இன்னும் சில…
"ஓ!நீங்களா!நலம்தானே!!"
அலைபேசியின் மறுமுனையிலிருந்து
நீண்ட மௌனத்திற்கு பின்
வழிந்த புதிய அன்பில்
அசௌகரியமுணர்ந்தது என் சுயம்!!

அறிந்து பின் மறந்த நண்பனாய்
மெல்லிய புன்னகையுடன
கேள்வி எழுப்பும் காலத்திற்கு
உண்மையான
என் அடையாளங்கள் நன்றாக தெரியும்!

நான் தான் என்னை தவறாக
அறிமுகபடுத்திவிட்டேன் போலும்!

3 comments:

  1. வாங்க வாங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. "நீண்ட மௌனத்திற்கு பின்
    வழிந்த புதிய அன்பில்
    அசௌகரியமுணர்ந்தது என் சுயம்!!"

    "நான் தான் என்னை தவறாக
    அறிமுகபடுத்திவிட்டேன் போலும்!"

    மிக அருமை நண்பரே..

    ReplyDelete
  3. "நான் தான் என்னை தவறாக
    அறிமுகபடுத்திவிட்டேன் போலும்"

    - நல்லாருக்கு...

    ReplyDelete